இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு! இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தோல்வி
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் முதன்மையான இங்கிலாந்தில் இப்போது புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரைத் தேர்வு செய்ய பணிகள் நடைபெற்றது.

போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தின் பிரதமராகக் கடந்த 2019இல் தேர்வு செய்யப்பட்டவர் போரிஸ் ஜான்சன். பல காலமாகவே சர்ச்சையில் இருந்த பிரெக்ஸிட்டை (ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது) செய்து காட்டினார் போரிஸ் ஜான்சன். இதனால் மக்களிடையே அவரது செல்வாக்கு அதிகரித்தது. இருப்பினும், அதன் பின்னர் கோவிட் ஊரடங்கு காலத்தில் பார்டி, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களை முக்கிய பதவிகளை நியமித்தது போன்ற நடவடிக்கையால் சர்ச்சையில் சிக்கினார்.

தேர்தல்
அவரது கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே போனது. இதையடுத்து வெறு வழியின்றி கடந்த ஜூலை மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார். இங்கிலாந்து சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார். இதனால் இங்கிலாந்து பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவி என இரண்டில் இருந்தும் அவர் விலகினார்.

ரிஷி சுனக்
இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும் போட்டியிட்டார். தொடக்கத்தில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும் கூட, பிரசாரத்தின் பிற்பகுதியில் அவருக்கான செல்வாக்கு சரியத் தொடங்கியது. தேர்தல் அமைதியாக நடந்த நிலையில், அதன் முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

லிஸ் டிரஸ் வெற்றி
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக் 60,399 வாக்குகளைப் பெற்ற நிலையில், லிஸ் டிரஸ் 81,326 வாக்குகளைப் பெற்று அவரை வீழ்த்தினார். கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து பிரதமராகும் நான்காவது தலைவர் லிஸ் டிரஸ் ஆவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications