Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு.. இந்தியாவுக்கு 3வது இடம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலக அழகி 2019 (Miss World 2019 )போட்டியில் உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன்ராவ் 3 வது இடத்தை பிடித்தார்.

2019 ஆம் ஆண்டிற்கான மிஸ் வேர்ல்ட் பட்டத்தை (உலக அழகி ஜமைக்காவின் டோனி-ஆன் சிங் வென்றார், பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் அழகிய போட்டியாளர்களை அவர் வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும், பிரான்சின் ஓபிலி மெசினோ இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

உளவியல் மாணவி

உளவியல் மாணவி

23 வயதாகும் டோனி-ஆன் சிங், அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் பெண்கள் படிப்பு மற்றும் உளவியல் மாணவி என்று மிஸ் வேர்ல்ட் வலைத்தளம் தெரிவித்துள்ளது. மிஸ் வேர்ல்ட் வலைதளம் இவரைப்பற்றி மேலும் கூறுகையில், டோனி-ஆன் சிங் மருத்துவ மருத்துவராக ஆசைப்படுகிறாராம். முன்னதாக பல்கலைக்கழகத்தில் கரீபியன் மாணவர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி இருக்கிறார்.

தொண்டு செய்வது

தொண்டு செய்வது

டோனி-ஆன் சிங் தான் உலக அழகி போட்டியை வென்ற நான்காவது ஜமைக்கா பெண் ஆவார். இவர் தனது ஓய்வு நேரத்தில் பாடுவது, சமைப்பது, தன்னார்வத் தொண்டு செய்வது போன்றவற்றை விரும்புவாராம்.

ஆதரவு தெரிவித்தார்

ஆதரவு தெரிவித்தார்

அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம், என்று மிஸ் வேர்ல்ட் வலைத்தளம் கேட்டதற்கு, அவரது தாயார், அவர் தனது கனவுகளை முடிந்தவரை எல்லா வழிகளிலும் தொடர அனுமதித்தும் ஆதரவளித்தும் பெருமை சேர்த்தது தான் கூறியிருக்கிறார்.

ஜமைக்கா வென்றுள்ளது

மதிப்புமிக்க உலக அழகி பட்டத்தை ஜமைக்கா பல ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு இப்போது முதல்முறையாக வென்றுள்ளது. தீவு நாடான ஜமைக்காவின் லிசா ஹன்னா 1993 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 2000 ஆம் ஆண்டில் பட்டத்தை கைப்பற்றிய 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் மனுஷி சில்லர் 2017 ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் உலக அழகி பட்டத்தை வென்று பெருமை சேர்த்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+