"உலகின் காஸ்ட்லி மது!" ஜஸ்ட் ரூ.11 கோடி தான்.. அடுத்த மாதம் ஏலத்திற்கு வரும் பாட்டில்.. என்ன ஸ்பெஷல்
லண்டன்: உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க மது பாட்டில் வகை ஒன்று அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது. இது சுமார் 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகெங்கும் மது வகைகளுக்கான மார்கெட் மிகப் பெரியது. அதிலும் இந்த பழமையான மது பாட்டில்கள் எப்போதும் அதிகபட்ச விலைக்குத் தான் விற்கப்படும். இவை பொதுவாக 20, 30 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்.

இதுபோன்ற விண்டேஜ் மது பாட்டில்களை பொறுத்தவரை எத்தனை ஆண்டுகள் அவை பழமையானதாக இருக்கிறதோ.. அந்தளவுக்கு அதிக ரேட்டிற்கு விற்கப்படும். இவை பொதுவாக 40, 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்.
ஸ்காட்ச் விஸ்கி: ஆனால், இப்போது அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஒரு சம்பவம் நடந்துள்ளது. வெறும் ஒரே ஒரு பாட்டில் ஸ்காட்ச் விஸ்கி 14 லட்சம் அமெரிக்க டாலர், அதாவது 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் இந்த மெக்கல்லன் ஆதாமி ஸாகாட்ச் விஸ்கி அடுத்த மாதம் ஏலத்திற்கு வர உள்ளது. இந்த ஸ்காட்ச் விஸ்கி தான் 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போக வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.
இது மெக்கல்லனின் 96 ஆண்டு பழமையான சிங்கிள் மால்ட் பாட்டில் என்றும் கூறப்படுகிறது. தி மெக்கல்லன் ஆதாமி 1926 என்ற இந்த மாடல் விஸ்கி நவம்பர் 18ஆம் தேதி லண்டனில் ஏலத்திற்கு வருகிறது. இதன் ஆரம்ப விலை 750,000 பவுண்டுகளாக அதாவது 7 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அது நிச்சயம் 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அட்வான்ஸ் ஏலம் நவம்பர் 1ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புது சாதனை: இதற்கு முன்பு இதே தி மெக்கல்லன் ஆதாமி 1926 ஸ்காட்ச் கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு முறை ஏலத்திற்கு வந்தது. அந்த சமயத்தில் இது 1.5 மில்லியன் பவுண்டுகளுக்கு (சுமார் ரூ. 15 கோடி) ஏலம் போனது. மது பாட்டில் ஒன்று இந்தளவுக்கு ஏலம் போவது இதுவே முதல்முறையாகும். கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் இதே விஸ்கியின் வேறு பாட்டில்கள் மூன்று முறை ஏலத்திற்கு வந்துள்ளன. அந்க மூன்று முறையும் இவை புதிய சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏலத்தை சோதேபி என்ற நிறுவனம் நடத்த உள்ளது. இது குறித்து சோதேபி நிறுவனத்தின் தலைவர் ஜானி ஃபோல் கூறுகையில், "மெக்கல்லன் 1926 என்பது அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒரு விஸ்கி ஆகும்.. நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக விண்டேஜ் பொருட்கள் ஏலத்திற்கு கொண்டு வருகிறோம்.இந்த மதிப்புமிக்க மது பாட்டிலை நாங்கள் ஏலத்திற்கு கொண்டு வருவது இதுவே முதல்முறை. இது நிச்சயம் புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
என்ன ல்பெஷல்: இந்த தி மகாலன் 1926 உலகின் மிகவும் மதிப்புமிக்க மது பாட்டில்களாக பார்க்கப்படுகிறது. சுமார் 60 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஸ்காட்ச் விஸ்கி மொத்தமே 40 பாட்டில்கள் தான் தயாரிக்கப்பட்டன.அதில் சில பாட்டில்கள் மெகல்லனின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் 12 பாட்டில்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப ரெடியானது. அதில் ஒன்று தான் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications