நீரவ் மோடி எங்கே பதுங்கி இருக்கிறார்.. அதிரடியாக கண்டுபிடிக்கப்பட்டது.. மத்திய அரசு அவசர கடிதம்!

நீரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    லண்டனில் தாடியுடன் சுற்றும் நீரவ் மோடி!- வீடியோ

    லண்டன்: நீரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவரின் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மும்பையில் உள்ள இவரின் பல கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டது.

    என்ன நடவடிக்கை

    என்ன நடவடிக்கை

    இவர் ஏமாற்றி வாங்கிய பல கோடி சொத்துக்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டும் இருக்கிறது. நிலங்கள் பல அரசு கைவசம் சென்றுள்ளது. அதேபோல் இவரது சொகுசு பங்களாக்கள் பல ஏற்கனவே இடிக்கப்பட்டுவிட்டது.

    ஆனால் தெரியாமல்

    ஆனால் தெரியாமல்

    ஆனால் இவர் எங்கே இருக்கிறார் என்ற விஷயம் மட்டும் தெரியாமல் இருந்தது. மேற்கத்திய தீவுகளில் இவர் பதுங்கி இருக்கிறார். பிரிட்டனில் சில நாடுகளில் மறைமுகமாக வசித்து வருகிறார் என்றெல்லாம் நிறைய செய்திகள் வந்தது. ஆனால் எந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    லண்டன்

    லண்டன்

    நீரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. லண்டனில் தியேட்டர் டிஸ்டிரிக்ட் என்ற பகுதியில் அவர் இருக்கிறார். லண்டனில் சோஹோ என்ற பகுதியில் அவர் புதிய வைர நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். 60 கோடி ரூபாய் வீடு ஒன்றில் தற்போது அவர் வசித்து வருகிறார். அங்கு புதிய தொழில் தொடங்கவும் அவர் விண்ணப்பித்துள்ளார்.

    வங்கி கணக்குகள்

    வங்கி கணக்குகள்

    அதேபோல் அவரிடம் வங்கி கணக்குகள் உள்ளது. இந்த கணக்குகள் அவரின் பெயரிலேயே பெறப்பட்டு இருக்கிறது. அவர் அணிந்து இருக்கும் ஜாக்கெட் ஒன்றின் விலையில் 15 லட்சம் ரூபாய் எனப்படுகிறது. அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் மத்திய அரசு இங்கிலாந்து அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+