லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபரேசனின் போது எதிர்பாராத விதமாக தொண்டையில் சிக்கிய பல்செட்.. பாவம் இந்த ஜாக் தாத்தா!

வயிற்றில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, பிரிட்டனை சேர்ந்த முதரியவரின் பல் செட் தொண்டையில் சிக்கியதால் மீண்டும் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

லண்டன்: வயிற்றில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, எதிர்பாராத விதமாக பிரிட்டனை சேர்ந்த முதரியவரின் பல் செட் தொண்டையில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்தவர் 72 வயதான ஓய்வுப்பெற்ற எலக்ட்ரிசியன் ஜாக். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வயிற்றில் இருந்த கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இது சிறிய அளவிலான அறுவை சிகிச்சை தான் என்பதால், ஒரு வாரத்தில் ஜாக் வீடு திரும்பிவிட்டார். ஆனால் அவருக்கு தொண்டையில் தீராத வலி ஏற்பட்டது. ஜாக்கால், எதையும் சாப்பிடவோ, படுக்கவோ முடியவில்லை.

மீண்டும் பிரச்சினை:

மீண்டும் பிரச்சினை:

இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார். ஜாக்கிற்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சினை இருந்ததால், அதுதொடர்பான பிரச்சினையாக இருக்கும் என மருத்துவர்கள் கணித்தனர். ஆனால் மருத்துவர்கள் கொடுத்த எந்த மருந்தும், ஜாக்கின் வலியை போக்கவில்லை.

பொருள்:

பொருள்:

மீண்டும் அவர் மருத்துவர்களை அணுகி தனது பிரச்சினை கூறினார். இதையடுத்து, ஜாக்கின் தொண்டை பகுதியை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அங்கு ஒருவிதமான அரைவட்ட வடிவில் ஏதோ ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது.

பல்செட்டைக் காணோம்:

பல்செட்டைக் காணோம்:

இதுகுறித்து ஜாக்கிடம் கேட்டபோது தான், கடந்த சில வருடங்களாக தான் பல் செட் பயன்படுத்தி வந்ததாகவும், வயிற்றில் அறுசை சிகிச்சை செய்யப்பட்ட சமயத்தில் இருந்து அதை காணவில்லை என்றும் கூறினார். அப்போது தான் தெரிந்தது ஜாக்கின் பல் செட் தான் அவரது தொண்டையில் சிக்சி வலியை ஏற்படுத்து வந்தது என்பது.

 தொடர் சிகிச்சை:

தொடர் சிகிச்சை:

இதையடுத்து தொண்டையில் சிக்சியிருந்த பல் செட்டை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். இருப்பினும் முதியவருக்கு முழுமையாக குணமாகவில்லை. தற்போதும் அவர் தொண்டையில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் யார் மீது தவறு என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

தொண்டைப் பிரச்சினை:

தொண்டைப் பிரச்சினை:

தான் பல் செட் பயன்படுத்தி வந்ததை முதியவர் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காதது தான் பிரச்சினைக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. நம்மூரில் பல்லு போன சொல்லு போச்சு என்பார்கள். இங்கு பல் செட் போனதால், ஒருவருக்கு தொண்டையே போய்விட்டது.

English summary
In Britain a 72 years Old man's denture got struck in his throat while he was admitted a benign lump surgery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X