பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகனுக்கு பெயர் சூட்டியது அரச குடும்பம்.. என்ன பெயர் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகனுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி. இவர் தனது காதலி மேகனை கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி மணந்தார்.

இவர்களது திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், பிரிட்டன் இளவரசியான மேகனுக்கு கடந்த திங்கள் கிழமை காலை 5.26 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது.

விழாக்கோலம்

விழாக்கோலம்

இந்த குழந்தை 7 பவுண்டுகள் எடையில் இருப்பதாகவும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது. இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் தம்பதிக்கு முதல் குழந்தை என்பதால் விண்ட்சர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

மகனுக்கு பெயர் சூட்டல்

மகனுக்கு பெயர் சூட்டல்

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இளவரசர் ஹாரி தனது மகனுக்கு ‘ஆர்ச்சி ஹாரிசன் மவுன்ட்பேட்டன் விண்ட்சர்‘ என பெயர் சூட்டியுள்ளார்.

மிகுந்த உற்சாகம்

மிகுந்த உற்சாகம்

மேலும் குழந்தையையும் இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி முதன் முதலாக வெளியுலகுக்கு காண்பித்துள்ளனர். பெற்றோர் என்ற அந்தஸ்து மிகுந்த உற்சாகத்தை தருவதாகவும் ஹாரி - மேகன் தம்பதியினர் தெரிவித்தனர்.

8வது கொள்ளு பேரன்

8வது கொள்ளு பேரன்

முன்னதாக குழந்தையை பிரிட்டன் மகாராணி எலிசபெத்திடம் காண்பித்து ஹாரி- மேகன் தம்பதி ஆசிர்வாதம் பெற்றனர். இளவரசர் ஹாரியின் குழந்ரதை ராணி எலிசபெத்திற்கு 8வது கொள்ளு பேரக் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+