லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊடகங்கள் தப்பு தப்பாக சொல்றாங்க.. இளவரசர்கள் வில்லியம், ஹாரி முதல்முறையாக கூட்டாக பேட்டி

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து அரச குடும்பத்தில் மோதல் இல்லை என்றும், ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாகவும் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி முதல்முறையாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பிரச்சனை குறித்து விளக்கம் அளித்தனர்.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி தனது மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கெலுடன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தனர்.

Recommended Video

    இங்கிலாந்து இளவரசர் அவரது மனைவி மேகனுடன் குழந்தைகளை கொஞ்சும் காட்சி - வீடியோ

    அரச குடும்பத்தில் ஏற்பட்ட மனகசப்பால் அவர் இந்த முடிவினை எடுத்திருப்பதாக இங்கிலாந்தில் உள்ள ஆங்கில ஊடகங்களில் செய்திகள் பரவின. இதனிடையே அரச குடும்பத்தில் பிரிவினை தடுக்க இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அழைத்தார்.

    மதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சிமதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சி

    அரச குடும்பத்தினர்

    அரச குடும்பத்தினர்

    அப்போது ஹாரி-மோகன் தம்பதியின் முடிவு குறித்து கலந்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பு நேற்று நார்போல்க்கில் உள்ள சான்ட்ரிங்ஹாம் அரண்மனையில் நடந்தது. அங்கு அரச குடும்பத்தினர் ஒருவருடன் ஒருவர் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது.

    பொய்யான செய்தி

    பொய்யான செய்தி

    அதன் பின்னர் இளவரசர்கள் வில்லியமும் ஹாரியும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறுகையில்," அரச குடும்பத்தில் மோதல் ஏற்பட்டதாக ஊடகங்கள் எங்களை பற்றி தவறான செய்திகளை வெளியிடுகின்றன. அரச குடும்பத்தில் மேகனின் வரவு மூத்த இளவரசர் வில்லியம்முக்கு பிடிக்கவில்லை, அதனால் அவர்களிடையே பழைய உறவு இல்லை என்று பொய்யாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

    மனக்கசப்பு இல்லை

    மனக்கசப்பு இல்லை

    மேலும் மேகனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்றும், வில்லியம்மின் இந்த அணுகுமுறையால் சகோதரர்களிடையே மனக் கசப்பு ஏற்பட்டுள்ளதாக பல பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன. இந்த செய்திகள் எதிலும் உண்மை இல்லை" என்று தெரிவித்தனர்.

    இனி ஒற்றுமை

    இனி ஒற்றுமை

    வில்லியம் தனது சகோதரர் ஹாரி உடனான உறவில் விரிசல் ஏற்பட்டதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டதுடன், இனி நாங்கள் இணைந்து இருப்போம்" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

    English summary
    prince Harry and William denied "false" claims that their relationship was damaged by bullying. they described a newspaper story as "inflammatory" and "offensive".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X