1000 ஆண்டு கனெக்ஷன்! 13 அரசர்கள் நல்லடக்கம்! வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கும் அரசு குடும்பத்திற்கும் உறவு
லண்டன்: ராணி எலிசபெத் இறுதிச்சடங்குகள் அனைத்தும் லண்டனில் இருக்கும் 1000 ஆண்டுகள் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் தான் நடைபெறுகிறது.
பிரிட்டன் நாட்டில் கடந்த 1952 முதல் ராணியாக இருந்து வந்தவர் எலிசபெத். சுமார் 70 ஆண்டுகள் ராணியாக இருந்த அவரது உடல்நிலை சில மாதங்களாகவே மோசமடைந்து வந்தது.
வயது மூப்பு காரணமாக அவர் உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொண்டு இருந்தார். இதையடுத்து ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் அவர் ஓய்வு எடுத்து வந்தார்.

ராணி எலிசபெத்
ராணி எலிசபெத் உடல்நிலை கடந்த செப். 8ஆம் தேதி மோசமடைந்தது. ஸ்காட்லாந்து அரண்மனையில் அவர் ஓய்வெடுத்து வந்த நிலையில், அங்கேயே அவர் காலமானார். இது பிரிட்டன் மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. ராணியின் மறைவைத் தொடர்ந்து மூத்த மகன் சார்லஸ் புதிய அரசராகப் பொறுப்பு ஏற்றார். ராணி எலிசபெத்திற்கு 10 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது.

1000 ஆண்டுகள்
இன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் ராணி எலிசபெத் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. மத்திய லண்டனில் உள்ள இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் தான் சுமார் 1,000 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களின் முடிசூட்டு விழாக்கள், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் என அனைத்தும் நடக்கும் இடமாக உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கும் இங்கு தான் நடக்கிறது. அதே தேவாலயத்தில் தான் அவரது திருமணமும் நடந்தது. அவர் முடி சூட்டியதும் இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கும் அரசு குடும்பத்திற்கும் அப்படி என்ன கனெக்ஷன்? வாங்கப் பார்க்கலாம்.

தொடர்பு
இந்த தேவாலயம் முதலில் 11ஆம் நூற்றாண்டில் மன்னர் எட்வர்ட் என்பவரால் ஒரு மடாலயத்தின் தளத்தில் கட்டப்பட்டது. இப்போது இருக்கும் இந்த தேவாலயம் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனின் மிகச்சிறந்த அடையாளங்களில் ஒன்றாகும்.. 1245 ஆம் ஆண்டில், மூன்றாம் ஹென்றி அரசராக இருந்த போது இதன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.

ராணி எலிபெத்
ராணி எலிசபெத்திற்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கும் இடையேயான தொடர்பு என்பது ராணியின் சிறு வயதில் இருந்தே தொடங்குகிறது. ராணி எலிசபெத்தின் தந்தை இதே இடத்தில் தான் முடி சூட்டப்பட்டார். இளவரசர் பிலிப்புடனான ராணியின் திருமணம் நவம்பர் 20, 1947 அன்று இதே தேவாலயத்தில் தான் நடந்தது. அவரது முடிசூட்டு விழாவும் இங்கு தான் ஜூன் 2, 1953இல் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வுகள்
வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகளும் ராணி எலிசபெத் தொடர்ந்து கலந்து கொண்டார். கடைசியாகத் தனது கணவர் பிலிப் நல்லடக்கத்திற்குப் பின்னர் மார்ச் 29, 2022இல் ராணி எலிசபெத் கடைசியாகத் தேவாலயத்திற்கு வந்து இருந்தார். இப்போது இதே இடத்தில் தான் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இன்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் நாளை சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இதில் மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள், பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் ட்ரஸ், அந்நாட்டு எம்பிக்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

டயானா
ராணி எலிசபெத் மகள் இளவரசி அன்னே மற்றும் கேப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோர் நவம்பர் 14, 1973இல் இங்குத் திருமணம் செய்து கொண்டனர். அவரது பேரன் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் அரச திருமணமும் ஏப்ரல் 29, 2011இல் இதே தேவாலயத்தில் தான் நடந்தது. இது மட்டுமின்றி இளவரசி டயானாவின் இறுதிச் சடங்கும் கூட செப்டம்பர் 6, 1997இல் இங்கு தான் நடந்தது. மேலும், ஏப்ரல் 9, 2002இல் ராணி அன்னையின் இறுதிச் சடங்கும் இங்கு தான் நடந்தது.

13 மன்னர்கள்
1066ஆம் ஆண்டு மன்னர் எட்வர்ட் தான் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்ட முதல் மன்னர். அதன் பின்னர் 1760ஆம் ஆண்டு வரை மொத்தம் 13 பிரிட்டன் அரசர்களும், முதலாம் எலிசபெத் உட்பட நான்கு அரசிகளும் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டனர். 1970இல் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்ட கடைசி மன்னர் இரண்டாம் ஜார்ஜ் ஆவார். அப்போது ராணி எலிசபெத் இங்கு அடக்கம் செய்யப்படவில்லையா என நீங்கள் கேட்கலாம். ஆம் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு மட்டுமே இங்கு நடைபெறுகிறது. ஆனால், நல்லடக்கம் இங்கு இல்லை.

நல்லடக்கம் எங்கே
வின்ட்சர் கோட்டையில் தான் கணவர் பிலிப்பின் உடல் உடன் ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இரண்டாம் ஜார்ஜ்க்கு பின்னர் அனைத்து மன்னர்களின் உடல்களும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல், வின்ட்சர் கோட்டை அல்லது கோட்டையை ஒட்டிய தோட்டமான ஃபிராக்மோரில் உள்ள கல்லறையில் தான் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications