“சோனிக் பூம்”.. ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் முன் நகரமே அதிரும்படி கேட்ட சத்தம்! என்ன நடந்தது?
லண்டன்: மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இருந்து எமர்ஜென்சி குறியீடு அனுப்பப்பட்டதால், உடனடியாக, ஹீத்ரூவில் இருந்து டைஃபூன் போர் விமானம் கிளம்பியது. இதன் காரணமாக நார்ஃபோக் பகுதியில் இன்று மிகப்பெரிய அளவில் குண்டு வெடித்தது போல சத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பையில் இருந்து ஏஐசி 129 என்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த விமானி, அந்த விமானம் லண்டன் ஹீத்ரோவை நெருங்கும் போது எமர்ஜென்சிக்கான ஸ்குவாக் குறியீட்டை அனுப்பினார். ஏர் இந்தியா விமானம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து நார்ஃபோக் பிராட்ஸுக்கு மேலே சுற்றிக் கொண்டிருந்தது.

இதையடுத்து, லண்டன் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்குவதற்கு முன், அந்த விமானத்தை ஆய்வு செய்ய லிங்கன்ஷையரில் இருந்து RAF யூரோஃபைட்டர் டைஃபூன் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது ஜெட் விமானம் சூப்பர் சோனிக் வேகத்தை எட்டியபோது மிகப்பெரிய சத்தம் ஏற்பட்டது.
ஏர் இந்தியா விமானம் ஜெட் விமானத்தால் இடைமறிக்கப்பட்டதால், அந்த விமானம் தரையிறங்கவில்லை. இதையடுத்து, சில நிமிடங்களில் டைபூன் ஜெட் விமானங்கள் தரையிறங்கின. சிவிலியன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் வழிகாட்டுதலின் கீழ் ஏர் இந்தியா விமானம் திட்டமிட்டபடி தரை இறங்கலாம் என தகவல் கொடுத்ததாக ராயல் விமானப்படை உறுதிப்படுத்தியது.
இங்கிலாந்தின் ராயல் விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ராவல் கன்னிங்ஸ்பையில் இருந்து RAF டைபூன் போர் விமானம் இன்று மதியம் ஒரு சிவிலியன் விமானத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்டது. பின்னர் சிவிலியன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் கீழ் ஏர் இந்தியா விமானம் அதன் பயணத்தை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டது." எனத் தெரிவித்துள்ளார்.

ஜெட் விமானம் அதிக வேகத்தில் இயங்கியபோது, நார்போக் பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு பெரிய குண்டு வெடிப்பு சத்தம் போல கேட்டுள்ளது. "எங்கள் தலைக்கு மேலே இரண்டு குண்டுகள் வெடித்தது போல சத்தம் கேட்டது" என அங்கு வசிக்கும் நபர் ஒருவர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
"பயங்கர சத்தத்தால் எங்கள் முழு வீடும் அதிர்ந்தது. என்ன சத்தம் என்று பார்க்க, அனைவரும் வெளியே ஓடி வந்தோம்" என ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு பொருள் ஒலியின் வேகத்தை விட வேகமாக காற்றில் பயணிக்கும் போது ஏற்படும் அதிர்வு அலைகள் உருவாகும்போது ஏற்படும் பயங்கர சப்தம் 'சோனிக் பூம்' என அழைக்கப்படுகிறது.
இறுதியில் ஏர் இந்தியா விமானம் ஹீத்ரோ விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதை லண்டன் ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications