ஏர்போர்ட் மேற்கூரையை பொத்துக் கொண்டு கொட்டிய மழை.. ஷாக் ஆகாதீங்க இது நம்மூர் இல்ல!

லண்டனில் உள்ள லூடான் விமான நிலையத்தில் மேற்கூரையை உடைத்துக்கொண்டு மழை நீர் பொத்துக்கொண்டு ஊற்றியது.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டனில் உள்ள லூடான் விமான நிலையத்தில் மேற்கூரையை உடைத்துக்கொண்டு மழை நீர் பொத்துக்கொண்டு ஊற்றியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது மேற்கூரையில் இருந்து கண்ணாடி விழுந்து உடைவது நமக்கு வழக்கமான செய்தி தான். ஆனால் லண்டனில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இதற்கு எல்லாம் மேலே ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால் நம்பமுடிகிறதா? உண்மையில் நடந்துள்ளது அப்படி ஒரு சம்பவம்.

தற்போது லண்டன் மாநகரில் மழை காலம் என்பதால் வானம் பொத்துக்கொண்டு ஊற்றுகிறது. ஆனால் நம்மூர் போல் வெள்ள பாதிப்பு எதும் இல்லை.

மேற்கூரை உடைந்தது:

இரு தினங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள லூடான் விமான நிலைய பகுதிகளில் மழை கொட்டி தீர்ததது. அப்போது அந்த விமான நிலைய மேற்கூரையை உடைத்துக் கொண்டு தண்ணீர் உள்ளே கொட்டியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வீடியோ:

வீடியோ:

சுமார் 15 நிமிடங்கள் வரை மழை நீர் உள்ளே கொட்டியது. இதை சில பயணிகள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேற்கூரை வழியாக மழை நீர் கொட்டியதால், தரைதளம் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

பயணிகள் அவதி:

பயணிகள் அவதி:

எனவே பயணிகள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். விமானங்கள் புறப்படுவதில் தாமதமானது. இதையடுத்து சம்மந்தப்பட்ட விமான நிலைய அதிகாரிகள் பயணிகள் மன்னிப்பு கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையம்:

சென்னை விமான நிலையம்:

நம்மூரில் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழும் விபத்துக்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். அது தொடர்பாக பல மீம்ஸ்களும் வெளி வந்த வண்ணம் தான் உள்ளன. ஒரு படத்தில் கூட விவேக் ஹெல்மெட் போட்டு கலாய்த்தார். தற்போது இதே போல் லண்டன் விமான நிலையத்தையும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+