பீர் குடிக்கலாம்.. வரீங்களா? மன்னர் சார்லஸை பார்த்து கேட்ட இளைஞர்! அதுக்கு அவர் சொன்ன பதில் இருக்கே
லண்டன்: பிரிட்டன் நாட்டின் புரிய மன்னரான மூன்றாம் சார்லஸ் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பிரிட்டன் நாட்டின் ராணியாக இருந்த மூன்றாம் ராணி எலிசபெத் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் நிற்கவும் நடக்கவும் சிரமப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தான், அவர் கடந்த வாரம் வியாழக்கிழமை காலமானார். ஸ்காட்லாந்து அரண்மனையில் அவர் ஓய்வெடுத்து வந்த நிலையில், அங்கேயே அவர் மறைந்தார்.

மன்னர் சார்லஸ்
இதையடுத்து பிரிட்டன் நாட்டில் 10 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது உடல் சமீபத்தில் தான் ஸ்காட்லாந்து அரண்மனையில் இருந்து லண்டன் எடுத்துவரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ராணியின் உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதிச் சடங்கைச் செய்ய ஆப்ரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்ற பெயரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வீடியோ
நீண்ட காலம் தலைமை பதவியில் இருந்த ராணி எலிசபெத் உயிரிழந்த நிலையில், அவரது மூத்த மகன் சார்லஸ் புதிய மன்னராகப் பதவியேற்றார். அவர் கடந்த சனிக்கிழமை மன்னராகப் பதவியேற்ற நிலையில், விரைவில் முடிசூட்டு விழாவும் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் 73 வயதான மன்னர் சார்லஸ் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கோபம்
அதன்படி ஒரு வீடியோவில் மேஜையில் இருக்கும் பொருட்களைப் பார்த்து எரிச்சலடையும் மன்னர், அதை நகர்த்துமாறு சைகை செய்வது தெரிகிறது. அதன் பின்னர் ஊழியர் வந்து பேனாவை மேஜையில் இருந்து எடுக்கிறார். வடக்கு அயர்லாந்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் பேனாவில் இருந்து இங்க் லீக்கானதால் மன்னர் சார்லஸ் கோபமடைந்தார். இந்த வீடியோவும் டிரெண்டானது.

பீர் குடிக்க போகலாமா
இப்போது அதையெல்லாம் தாண்டி வீடியோ ஒன்று பரவி வருகிறது. மன்னருக்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் தான் அது! அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் சார்லஸை பார்த்து "பீர் குடிக்க போகலாமா" என்று கேட்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் இப்போது சாதாரணமாகிவிட்டது. இப்படி நடக்கும்போது, பொதுவாக அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிரித்துக் கொண்டே சென்றுவிடுவார்கள்.

எங்கே போகலாம்
ஆனால், சார்லஸ் அப்படிச் செய்யவில்லை. இளைஞர் கேட்டவுடன் அதற்கு, "எங்கே போகலாம்" என்று கேட்கிறார். இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் சிரிக்கத் தொடங்குகின்றனர். இந்த பதிலை அந்த இளைஞர் கூட எதிர்பார்க்கவில்லை. எப்படியோ சமாளித்து அந்த இளைஞர், "எங்கு வேண்டுமானாலும் போகலாம்" என்று கூறுகிறார். இதற்குச் சிரித்துக் கொண்டே, "இல்லை எதாவது ஒரு இடத்தை நீங்கள் சொல்ல வேண்டும்" என்கிறார் சார்லஸ்.

கூல்
இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது இல்லை. இது கடந்த ஜூலை மாதம் அவர் இளவரசாக இருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். மன்னராகப் பதவியேற்றதும் அடிக்கடி பொது இடத்தில் சார்லஸ் டென்ஷன் ஆகிவரும் நிலையில், முன்பு அவர் எவ்வளவு கூலாக இருந்தார் என்பதைக் காட்டவே இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

முடிசூட்டு விழா
ராணி எலிசபெத் உயிரிழந்த நிலையில், சார்லஸ் புதிய மன்னரானார். அவர் கடந்த சனிக்கிழமை புதிய மன்னராகப் பதவியேற்ற நிலையில், விரைவில் முடிசூட்டு விழாவும் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. "ஆப்ரேஷன் கோல்டன் ஆர்ப்" என்று பெயரிடப்பட்டுள்ள இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராணி எலிசபெத் மறைவுக்கு 10 நாட்கள் அரசு முறை துக்கம் அங்கு அனுசரிக்கப்படும் நிலையில், அதற்குப் பின்னரே இந்த நிகழ்வு நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications