இது வானவில்லா? வில்லை காணோமே.. வெறும் கோடு தான் இருக்கு.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்!
அரியவகை நேரான வானவில் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.
லண்டன்: இங்கிலாந்தில் தோன்றிய அரியவகை நேரான வானவில் புகைப்படங்கள் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயற்கையின் அற்புதங்களில் ஒன்று வானவில். மழைகாலங்களில் வானில் தென்படும் வண்ணமயமான வானவில்லை பார்ப்பதற்கு கண்கள் இரண்டு பத்தாது. அந்த அளவுக்கு நமக்கு குதூகலத்தை ஏற்படுத்தக்கூடியவை அவை. வானவில்லைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சிறுவயது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வானவில்லைப் பார்த்து விட்டால் குஷியாகி விடுவார்கள்.

பொதுவாக நம் கண்ணில் தென்படும் வானவில் வளைவாகத்தான் இருக்கும். அதன் காரணமாகவே அவற்றிற்கு வானவில் என பெயரிட்டனர் நம் முன்னோர்கள். ஆனால் பூமியின் சமதளத்தில் நேர் கோடாக காட்சியளிக்கும் வானவில்லை பார்த்ததுண்டா? இங்கிலாந்து நாட்டில் அப்படிப்பட்ட ஒரு வானவில் தோன்றி இருக்கிறது.
தார்குவே நகரில் உள்ள பெய்குதான் கடற்கரையில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில், நீலக் கடலுக்கு மேற்புறத்தில் நேர் கோடாகக் காட்சியளிக்கிறது அந்த வானவில். சூரிய ஓளி மற்றும் கடற்காற்றின் காரணமாக இதுபோல் நேர் கோடாக வானவில் தோன்றியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ வானவில்லை பார்ப்பதே மனதுக்கு மகிழ்ச்சியான விஷயம் தான். அதிலும் இப்படி நேர் கோடாக காட்சியளிக்கும் வானவில்லை பாக்கும் போது மனம் குதூகலத்துடன் ஆச்சர்யமும் தொற்றிக் கொள்கிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications