Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்.. முழு பலத்துடன் களமிறங்கும் தொழிலாளர் கட்சி! சிக்கலில் ரிஷி சுனக்?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு இந்த தேர்தல் கடும் சவாலை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரமர் ரிஷி சுனக், ஒவ்வொரு வாக்குகளுக்கு தான் போராடிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பிரிட்டனை பொறுத்தவரை கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி என இரண்டு கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சிதான் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வருகிறது. ஆனால் இந்த 15 ஆண்டுகளில் ஏராளமான குளறுபடிகள் நடந்திருக்கின்றன.

Britain Elections Rishi Sunak

ஐந்து முறை கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர்கள் மாறியிருக்கின்றனர். ஆனால் பிரிட்டன் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. ஒரு காலத்தில் உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டன், தற்போது பொருளாதாரத்தில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையிண்மை, பணவீக்கம் உள்ளிட்டவை பிரிட்டனின் பிரதான பிரச்னையாக மாறியிருக்கிறது. எனவே போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனை சரி செய்ய அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

இப்படி இருக்கையில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் 650 எம்பிக்கள் இருக்கின்றனர். நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், வெளியான கருத்துக்கணிப்புகளின்படி ரிஷி சுனக்குக்கு குறைவான அளவு தொகுதிகளே கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ரிஷி சுனக்குக்கு வாய்ப்புகள் வழங்கப்பட எனவே கன்சர்வேட்டிவ் கட்சி கடும் அதிருப்தியில் இருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய சுனக், "ஒவ்வொரு ஓட்டுக்கும் நான் போராடிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார். எப்படி இருப்பினும் இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான தோல்வி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றும், இருந்தாலும் எதிர்க்கட்சியாக கன்சர்வேட்டிவ் தனது பணியை சிறப்பாக செய்ய வேண்டியது இருக்கிறது எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றால் ஐரோப்பா முழுவதும் இந்த தேர்தலின் தாக்கம் பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+