"ஆரம்பமே அதிரடி!" பல டாப் அமைச்சர்களை வீட்டிற்கு அனுப்பிய ரிஷி சுனக்! பதவியேற்ற கையோடு பரபர உத்தரவு
லண்டன்: பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், அவர் ஆரம்பம் முதலே அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார்.
பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் எடுத்த சில முடிவுகள் அந்நாட்டுப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. இதனால் அவரது சொந்த கன்சர்வேடிவ் கட்சியிலேயே பலரும் அவருக்கு எதிராகத் திரும்பினர்,
மேலும், அவரது அமைச்சரவையில் இருந்து பலரும் வரிசையாக விலகினர். சொந்த கட்சியிலேயே அழுத்தம் அதிகரித்தால் அவர் வேறு வழியின்றி பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

பிரிட்டன்
இதையடுத்து புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்தலில் ரிஷி சுனக் தவிர வேறு யாருக்கும் குறைந்தபட்ச எம்பிக்களின் ஆதரவு கூட கிடைக்கவில்லை. இதையடுத்து ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமராகத் தேர்வானார். கடந்த 200 ஆண்டுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராகத் தேர்வாவது இதுவே முதல்முறையாகும். மேலும், பிரிட்டன் வரலாற்றில் இளம் வயது பிரதமர் என்ற சிறப்பையும் அவர் பெறுகிறார்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்கை மன்னர் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாகப் பிரிட்டன் பிரதமராக நியமித்தார். அதன் பின்னர் பிரிட்டன் பிரதமர் அதிகாரப்பூர்வ இலத்தின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். பிரிட்டன் பொருளாதாரத்தைக் காப்பதே தனது முதல் பணி என்று கூறிய அவர், லிஸ் டிரஸின் நோக்கம் சரி என்றாலும் கூட அவர் எடுத்த சில நடவடிக்கைகள் நெகடிவ் பாதிப்புகளை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.

கடினமான முடிவு
பிரிட்டன் பொருளாதாரத்தைக் காக்க சில கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும் என்றும் கூட அவர் கூறி இருந்தார். இதனிடையே ஒரு நாள் கூட தாமித்தாகமல் முதல் நாளில் இருந்தே ரிஷி சுனக் தனது அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார். பதவி ஏற்ற சில மணி நேரத்தில் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இருந்த பல அமைச்சர்களை ராஜினாமா செய்யும்படி ரிஷி சுனக் வலியுறுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதிரடி
இதுவரை குறைந்தது நான்கு அமைச்சர்களிடம் இதுபோல பதவி விலகுமாறு அவர் வலியுறுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வணிக துறை அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை அமைச்சர் பிராண்டன் லூயிஸ், வேலைவாய்ப்பு துறை அமைச்சர் க்ளோ ஸ்மித், மேம்பாட்டு துறை அமைச்சர் விக்கி ஃபோர்ட் ஆகியோரை பதவி விலகுமாறு அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்,

புதிய அமைச்சர்கள்
விரைவில் மேலும் சில அமைச்சர்களையும் கூட ரிஷி சுனக் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் தற்போது பிரிட்டன் நிதி அமைச்சராக இருக்கும் ஜெர்மி ஹன்ட் அதே பதவியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் பதவி விலகிய உடனே சில மணி நேரங்களில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கட்டான சூழல்
தேர்தலுக்குப் பின் பிரதமராகத் தேர்வாகும் போது கொஞ்சம் பொறுமையாகச் செயல்படலாம். சில வாரங்களுக்கு எவ்வித அதிருப்தியும் இருக்காது. ஆனால், ரிஷி சுனக் இப்போது இக்கட்டான ஒரு சூழலில் பிரிட்டன் பிரதமர் பதவியை ஏற்று உள்ளார். மிக விரைவாக அவர் பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். குறைந்த காலத்தில் ரிசல்டுகளை காட்ட வேண்டும் என்பதால் ஆரம்பத்திலேயே அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications