ஆபாச பட நடிகையானார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மகள்.. ஊக்கம் கொடுத்த பெற்றோர்.. கொடுமை!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஜுராசிக் பார்க் உள்ளிட்ட புகழ் பெற்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வளர்ப்பு மகள் மைக்கேலா (23), வயது வந்தோருக்கான ஆபாச வீடியோக்களை சுயமாக தயாரிக்கத் தொடங்கியுள்ளார் என்பதை அவரே கூறியுள்ளார். நான் இப்போது ஒரு ஆபாச நடிகை என்று பெருமையோடு சொல்கிறார் அவர்.

இங்கிலாந்து பத்திரிகையான 'தி சன்' என்ற ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்தான், இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, மைக்கேலா என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? என பெற்றோர்களான ஸ்டீவன் மற்றும் அவரது மனைவி கேட் கேப்ஷா ஆகியோர்தான், இந்த தொழில் தேர்வுக்கு உறுதுணையாக இருந்தனர் என்றும் அசால்ட்டாக கூறியுள்ளார்.

Steven Spielbergs daughter Mikaela bocome a adult film star

மைக்கேலா கூறியதை நீங்களே பாருங்கள்: நான் எப்போதுமே மிகவும் பாலியல் இயல்புடையவளாக இருந்தேன், இது எனக்கு முன்பே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனது முக்கிய நம்பிக்கை என்னவென்றால், நான் இங்கு லாபகரமான ஒரு இடத்தைப் பெற முடியும். எனவே, நான் என் உடலைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

ஆபாச பட நட்சத்திரமாக மாறுவதற்கான முடிவை அவரது பெற்றோர்கள், எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள் என்ற கேள்விக்கு, ​​அந்த செய்தியை ஃபேஸ்டைம் மூலம் அவர்களிடம் கூறினேன். எனது பாதுகாப்பு எப்போதுமே அவர்களுக்கு முக்கியமானது. ஆனால் எனது தொழில் தேர்வில் அவர்கள் வருத்தப்படவில்லை, என்று பதிலளித்துள்ளார்.

முன்னதாக, மைக்கேலா தனது வீடியோக்களை ஆபாச தளம் ஒன்றில் "சுகர் ஸ்டார்" என்ற பெயரில் வெளியிட்டிருந்தார். அதேநேரம் மைக்கேலாவிடம் பாலியல் சார்ந்த வணிக உரிம வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர் லைசென்ஸ் இல்லை. எனவே அந்த வீடியோக்கள் அகற்றப்பட்டன.

தனி ஆபாச தளத்தை தொடங்க மைக்கேலா முடிவு செய்த காரணத்தையும் அவரே கூறியுள்ளார். "என் உடலைப் பயன்படுத்தி சம்பாதிக்க முயன்று, அது, முடியாமல் நான் மிகவும் சோர்வடைந்தேன். எனது மனதை திருப்திப்படுத்தாத அன்றாட வேலையை செய்வதில் எனக்கு திருப்தி இல்லை. எனவேதான், ஆபாச ஸ்டாராக மாறி, நானே படத்திற்கான தயாரிப்பாளராகவும் மாறிவிட்டேன் என்கிறார் பெருமிதம் பொங்க.

மைக்கேலாவைத் தவிர, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் கேட் கேப்ஷா ஆகியோருக்கு, மேக்ஸ் சாமுவேல் ஸ்பீல்பெர்க், ஜெசிகா கேப்ஷா, சாயர் அவேரி ஸ்பீல்பெர்க், தியோ ஸ்பீல்பெர்க், சாஷா ரெபேக்கா ஸ்பீல்பெர்க் மற்றும் டெஸ்ட்ரி அல்லின் ஸ்பீல்பெர்க் என மொத்தம், ஆறு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+