திடீரென வீசிய சூறைக்காற்று.. தரையிறங்கும்போது தள்ளாடிய விமானம்.. திக் திக் சிசிடிவி காட்சி
லண்டன்: லண்டனில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென வீசிய பலத்த காற்றால் தள்ளாடியது. சரியாக தரையிறங்கும் போது காற்று வீசியதால் அந்த விமானம் தரையிறங்க முடியாமல் தள்ளாடும் சிசிடிவி காட்சி விமான பயணிகள் மத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானப்பயணத்தின் போது விமானங்கள் டர்புலன்ஸில் சிக்கி நடு வானில் குலுங்குவது குறித்த செய்திகளை அடிக்கடி கேள்வி பட்டு இருக்கலாம். விமானத்தில் டர்புலன்ஸின் போது விமானங்கள் குலுங்குவதால் பயணிகள் பீதியில் உறைவதும் சில நேரங்களில் பயணிகள் காயத்திற்கு உள்ளாகும் நிகழ்வுகளும் நடைபெறும்.

ஆனால், லண்டனில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அந்தரத்தில் தள்ளாடிய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்ற விமானம் தான் இப்படி தரையிறங்கும் போது அந்தரத்தில் தள்ளாடியபடி ஒருவழியாக லேண்டிங் ஆகியிருக்கிறது. விமான பயணிகளையும் பார்ப்பவர்களையும் திகிலில் உறைய வைத்த இந்த சம்பவம்குறித்த விவரம் வருமாறு:-
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டனுக்கு போயிங் 777- என்ற விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் தரையிறங்கும் போது திடீரென பலத்த காற்று வீசியது. இதனால், விமானம் தள்ளாடியது. விமானத்தில் இருந்த பயணிகள் திடீரென அங்கும் இங்கும் விமானம் அலைமோதுவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
American 777 insane landing at London Heathrow!
— BIG JET TV (@BigJetTVLIVE) December 27, 2023
Caught during our livestream at @HeathrowAirport. Strong, gusting crosswind elements catching-out even the most seasoned pilots! Wouldn’t have liked being the NFP on this one 😂 watch the flight surfaces 🫨
Get involved: what’s… pic.twitter.com/PjfqhsQjX2
எனினும் சாதுர்யமாக செயல்பட்ட விமானி, விமானத்தை லாவகமாக தரையிறக்க முயன்றார். இருந்தாலும் பலத்த காற்று வீசியதால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் நீடித்தது. முதலில் பின்பக்க வீல்கள் லேண்டிங் ஆன போதும் விமானத்தின் மூக்குப்பகுதி என்று சொல்லப்படும் முன்பகுதி மீண்டும் வானத்தை நோக்கி நிமிர்ந்தது. இதனால், விமானத்திற்குள் இருந்த பயணிகள் அங்கும் இங்கும் அசையும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஒருவழியாக விமானம் பத்திரமாக தரையிறங்கியதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த திகில் சம்பவத்தில் பயணிகள் யாருக்கேனும் காயம் ஏறப்ட்டதாகவோ பொருட் சேதம் ஏற்பட்டதாகவோ எந்த தகவலும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை எதுவும் வெளியிட வில்லை.












Click it and Unblock the Notifications