"அடங்காத" டீச்சர்.. 13 வயசு பையனை அப்பாவாக்கி.. ஆடிப்போன கணவர்.. பிரிட்டனில் ஒரு அக்கப்போர்!
லண்டன்: 13 வயசு சிறுவனுடன் டீச்சர் செய்த காரியத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. ரொம்பவும் கேவலமான செய்திதான் இது.. நடந்திருக்கிற சம்பவம் அப்படி!
பிரிட்டன் நாட்டில் பெர்ஷையர் வின்ட்சர் என்ற நகரம் உள்ளது.. இந்த நகரத்தை சேர்ந்தவர் 20 வயது பெண் அவர்.. பெயர் லியா கார்டைஸ்!
குழந்தை பராமரிப்பு பற்றின படிப்பை தன் முதுகலை பட்டத்தில் படித்து வருகிறார்.. இதை தவிர நர்சரி பள்ளியில் டீச்சராவும் வேலை பார்த்து வருகிறார்.

செம போதை
ஆனால் படிக்கிற படிப்புக்கும், செய்கிற வேலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இவர் ஒரு காரியத்தை செய்திருக்கிறார்.. 2017-ம் ஆண்டில் ஒருநாள், செம போதையில் லியா இருந்துள்ளார்.. அப்போது திடீரென 13 வயது சிறுவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துவிட்டார்.. போதை தலைக்கேறியதில் அந்த சிறுவனை பலாத்காரமும் செய்துள்ளார்.

காதலன்
இதற்கு பிறகும் அடிக்கடி அந்த சிறுவன் வீட்டிற்குள் நுழைந்து பலமுறை அவனை கற்பழித்துள்ளார்.. ஆனால் இவருக்கு ஒரு காதலன் இருக்கிறார்.. அவரைதான் பலவருடமாக லியா காதலித்து வந்தார்.. சிறுவனுடன் உறவு இருந்தபோதும் இந்த காதலனை அவர் கைவிடவே இல்லை.. இறுதியில் காதலனை கல்யாணமும் செய்துகொண்டார் லியா!

ஆவேசம்
ஒருவேளை பிறந்த குழந்தை, தன்னுடையது இல்லையோ என சந்தேகமும் வந்துவிட்டது.. அதனால் உடனடியாக மனைவி மீது பக்கத்தில் இருந்த ஒரு ஸ்டேஷனில் புகார் தந்தார். அதன்பேரில் போலீசாரும் விசாரணையில் இறங்கினார்.. ஆனால் லியா, தான் எந்த தப்புமே செய்யவில்லை.. அந்த சிறுவன் யாரென்று தெரியாது என அடித்து பேசினார்... கணவர் சொன்ன குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார். லியா பேச்சை பார்த்து குழம்பிய போலீசார், பேசாமல் குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்துவிடலாம் என முடிவு முடிவு செய்து, அதன்படியே சோதனையும் நடத்தப்பட்டது..

சோதனை
இறுதியில், அந்த குழந்தைக்கு அப்பா 13 வயது சிறுவன்தான் என ரிப்போர்ட் வந்தது! ஒரு சந்தேகத்துக்காக டெஸ்ட் எடுக்க சொன்னால், உண்மையாகவே அந்த சிறுவன்தான் அப்பாவா என அதிர்ச்சி அடைந்தார் கணவர்! அளவுக்கு மீறி பாசத்தையும், அன்பையும் பொழிந்து குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தவர் தலையில் இடி வந்து விழுந்ததுபோல ஆகிவிட்டது.. இன்னும் அவர் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை என்றாலும் இந்த சம்பவத்தின் பரபரப்பும் அங்கு அடங்கவே இல்லை.












Click it and Unblock the Notifications