சாகசம் பிடிக்குமா.. உலகின் தலை சிறந்த மிதக்கும் மேம்பாலங்கள்.. போன லைப்டைம் செட்டில்மெண்ட்!
லண்டன்: சாகசத்தையும், அத்துடன் பயணத்தை விரும்புவர்களுக்கு உலகின் பல அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக மிதக்கும் பாலங்கள் மிகஅற்புதமான அனுபவத்தை தரும். உலகில் பல மிதக்கும் பாலங்கள் உள்ளன. இதில் சில பாலங்களில் உங்களுக்கு பயணிக்கும் அனுபவம் கிடைத்தால் வாழ்நாள் திருப்தி கிடைக்கும்.
அப்படி உங்களுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் தரும் அற்புதமான ஐந்து பிரபலமான மிதக்கும் பாலங்களை இப்போது பார்ப்போம்.
பொதுவாக சாலையில் பயணிப்பதை பலரும் விரும்புவார்கள். அதே சாலை தண்ணீரின் மேல் இருந்தால் இன்னும் பிடிக்கும். ஆனால் அதே தண்ணீரில் உள்ள சாலை மிதக்கும் சாலையாக, அதாவது அந்த பாதை முழுவதும் மிதக்கும் பலமாக இருந்தால், காரில் செல்வதோ இருசக்கர வாகனத்தில் செல்வதாகவே இருந்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்க்க முடிகிறதா, அப்படிப்பட்ட மிதக்கும் பாலங்களை இப்போது பார்ப்போம்.

ஷிசிகுவான் மிதக்கும் பாலம், சீனா
கனவுகளின் நீண்ட பாலம் என்று அழைக்கப்படும் ஷிஜிகுவான் மிதக்கும் பாலம், சீனாவின் தென்மேற்கு ஹூபே மாகாணத்தில் உள்ள சுவான் பகுதியில் அமைந்துள்ளது, இது உலகின் மிகவும் பிரபலமான பாண்டூன் பாலங்களில் ஒன்றாகும். நதியை சுற்றிலும் பசுமையான மரங்களால் ஆன காடுகள் அமைந்திருக்கின்றன. இந்த நதியில் மரத்தாலான பலகை பாலம் அமைந்துள்ளது. மிதக்கும் பலமான இதில் பயணிப்பது நீர் மேற்பரப்பில் நகர்வது போன்ற அற்புதமான அனுபவம் கிடைக்கும்.

நார்ட்ஹார்ட்லேண்ட் பாலம், நார்வே
நார்வேயின் வெஸ்ட்லேண்ட் கவுண்டியில் உள்ள கிளாவனசெட் (Klauvaneset) மற்றும் பிளாட்டே தீவு (island of Flatøy) இடையே அற்புதமான பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் பாண்டூன் பகுதி நார்வே நாட்டு கடல்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. சுமார் 5,295 அடி நீளம் கொண்ட, கேபிள்-இணைக்க பட்ட பாலம் மற்றும் பான்டூன் பாலங்களின் கலவையாகும். பாலத்தின் பாண்டூன் பகுதி நார்வே நாட்டு கடல்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

ஹோமர் எம். ஹாட்லி மெமோரியல் பாலம், வாஷிங்டன், அமெரிக்கா
மூன்றாவது ஏரி வாஷிங்டன் பாலம் என்றும் அழைக்கப்படும் இந்த மிதக்கும் பாலம் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட்டில் உள்ளது. இது உலகின் ஐந்தாவது நீளமான மிதக்கும் பாலமாகும். இந்த ஹோமர் எம். ஹாட்லி மெமோரியல் பாலம் 5,811 அடி நீளம் கொண்டதாகும். பாலத்தின் முந்தைய பகுதி 1990 இல் புதுப்பிக்கும் போதும், பழுதுபார்க்கும் போது மூழ்கியது. தற்போதைய பாலம் 1993 இல் கட்டப்பட்டதாகும்.

வில்லியம் ஆர். பென்னட் பாலம், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
வில்லியம் ஆர். பென்னட் பாலம் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா மற்றும் வெஸ்ட்பேங்க்கை இணைக்கும் ஒகனகன் ஏரியின் குறுக்கே அமைந்துள்ளது . மொத்தம் 1,060 மீட்டர் நீளம் கொண்ட இந்த மிதக்கும் பாலம் காற்றின் வேகத்திற்கு ஏற்ப வளைந்து கொடுக்கும். இதில் செல்வது அற்புதமான அனுபவத்தை தரும்.

கோழிக்கோடு பேப்பூர் மெரினா கடற்கரை மிதக்கும் பாலம், கேரளா
கேரளாவின் கோழிக்கோட்டில் கடந்த ஆண்டுதான் இந்த மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம் கட்டப்பட்டது. சாகசத்தை விரும்புவோர் 100 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்ட மிதக்கும் பாலத்தில் நடந்து சென்றால் அலைகளுக்கு மேல் மிதக்க முடியும். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவே இந்த பாலம் கட்டப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications