அஜித்தின் ரேஸ் காரில் அமர்ந்து போஸ் கொடுத்த முதல்வர் விஜய்.. லண்டனில் கார் ரேஸை தொடங்கி வைத்தார்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் லீ மான்ஸ் கோப்பை கார் ரேஸை தமிழக முதல்வர் விஜய் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் ரேசினை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அஜித்தின் காருக்கே சென்று கை குலுக்கி வாழ்த்து முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக முதல்வர் விஜய் அஜித்தின் ரேஸ் காரில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

லண்டன் சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் நடைபெற்று வரும் லீ மேன்ஸ் கப் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பிரிட்டனில் தொடங்கி வைத்தார். லண்டனுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்று இருக்கும் முதல்வர் விஜய், கார் பந்தய நிகழ்ச்சியை பார்வையிட்டு, தொடங்கி வைக்க முடிவு செய்தார்.

TN CM Vijay posed while seated in Ajith s race car inaugurates silverstone Circuit race in London

நடிகர் அஜித்தும் கார் ரேசருமான அஜித்தின் அணியும் இதில் பங்கேற்பதால், இந்த கார் பந்தயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்நது. இந்த சூழலில்தான், பந்தயம் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்ற முதல்வர் விஜய், அஜித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அஜித் காரில் ஏறியபிறகு அவருக்கு கைகுலுக்கியும் தம்ஸ் அப் காட்டியும் முதல்வர் விஜய் வாழ்த்தினார்.

பிறகு அஜித்குமாரின் கார் மீது ஏறி அமர்ந்து ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அஜித்குமாருக்கு முதல்வர் விஜய்க்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அஜித்குமாருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அஜித்குமாரும் தம்ப்ஸ் அப் காட்டி ரேஸில் பங்கேற்றார்.

சுமார் 9.30 மணியளவில் போட்டியை பச்சைக்கொடி காட்டி முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல்வர் விஜய் ரேசை தொடங்கி வைத்ததும் மின்னல் வேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்தன. அஜித்குமாரின் காரும் ரேசில் சீறியபடி பாய்ந்தது. பந்தயம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பந்தயத்தை பார்வையிட்டு வருகிறார்கள். முதல்வர் விஜய் வருகை காரணமாக அவரைக் காண லண்டனில் வாழும் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+