பிரிட்டன் தேர்தலில் அசத்திய இந்திய வம்சாவளியினர்.. மொத்தம் எத்தனை பேர் வெற்றி தெரியுமா?.. இதோ லிஸ்ட்
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், தொழிலாளர் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்கிறார். இந்த தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் 26 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். கடந்த முறை 15 எம்பிக்கள் இந்திய வம்சாளியை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
பிரிட்டன் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த தேர்தலில், தொழிலாளர் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்கிறார்.

பிரிட்டன் தேர்தல்: ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. ஆனால் வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே தொழிலாளர் கட்சி அதிக இடங்களை வென்று வந்தது. இறுதியில் மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வென்றது. ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பெரும்பான்மை பெற 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் 412 இடங்களில் வென்ற தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கிறது. இதன் மூலம் தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்கிறார். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது.
ரிஷி சுனக் தோல்வி: இதேபோல் ரிஷி சுனக் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. கடந்த 2 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்த ரிஷி சுனக் இப்போது தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். நவீன பிரிட்டன் வரலாற்றில் கன்சர்வேடிவ் கட்சி இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்ததே கிடையாது. இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தனது எம்பி சீட்டை தக்க வைப்பாரா என்பதிலேயே சந்தேகம் இருந்தது. இருப்பினும், அவர் எப்படியோ சமாளித்து தனது எம்பி சீட்டை தக்க வைத்துக் கொண்டார்.
கீர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக பிரதமராக அறிவிக்கப்பட்டார். ஆட்சி அமைக்க மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். இதையடுத்து பிரிட்டன் பிரதமராக தனது முதல் உரையையும் கீர் ஸ்டார்மர் நிகழ்த்தினார். இதனிடையே பிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியை செர்ந்தவர்களும் கவனம் பெறும் வகையில் வெற்றி பெற்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கன்சர்வேட்டிவ் கட்சி:
ரிஷி சுனக்
ஷிவானி ராஜா,
சுயலா பிரேவர்மேன்
ப்ர்த்தி படேல்,
நீல் சாஸ்திரி
தொழிலாளர் கட்சி:
கனிஷ்கா நாராயணன்
நவேந்து மிஸ்ரா
ப்ரீத் கவுர் கில்
தன்மனஜித் சிங்க்
வேலரி வாஸ்
சோனியா குமார் துட்லே
ஹர்ப்ரீத் உப்பல்
சீமா மல்ஹோத்ரா
வாரீந்தர் ஜஸ்
குரீந்தர் ஜோசன்
ஐஸ் அத்வால்
பேகி ஷங்கர்
சாத்வீர் கவுர்
சோஜன் ஜோஷப்
தன் மன் ஜித் சிங்க் தேஷி
லிசா நந்தி
சோனியா குமராவ்
சாந்தர்,
கிரித் என்விஷில்
முனிரா வில்சன்
107 பேர் போட்டி: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் 26 பேர் பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். கடந்த முறை 15 எம்பிக்கள் இந்திய வம்சாளியை சேர்ந்தவர்களாக இருந்தனர். தற்போது இதுவரை இல்லாத அளவாக 26 பேர் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்க்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 107 பேர் போட்டியிட்ட நிலையில், 26 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications