என்னா புத்திசாலித்தனம்.. என்னா புத்திசாலித்தனம்.. இந்த பொண்ணைப் பார்த்து நீங்களும் கத்துக்கோங்கப்பா!
லண்டன்: சோப் ஆயிலை டிரெட்மில்லாக மாற்றிய ஒரு பெண்ணின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புவோர், உடலை பிட்டாக வைத்திருக்க விரும்புவோர் தினமும் செல்லும் இடம் ஜிம். ஆனால் வசதி வாய்ப்பு இருப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
அதுவும் ஜிம்கள் எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகளுக்கு சென்றுவிட்ட இன்றைய சூழலில், ஜிம்முக்கு சென்று சந்தா வாங்குவது எல்லாம் மிடில்கிளாஸ் மக்களுக்கு நிறைவேறாத கனவாகவே மாறிவிட்டது.

எளிமையான தீர்வு:
இந்த பிரச்சினைக்கு எளிமையான தீர்வு ஒன்று ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் ஒருபெண். 'தேஜ்301' (Dej301) எனும் டிவிட்டர் கணக்கு வைத்திருக்கும் இவர், அதில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தரையில் கொஞ்சம் சோப் ஆயிலை ஊற்றுகிறார். பின்னர் அதில், கொஞ்சம் தண்ணீரை ஊற்றுகிறார்.

சோப் மில் ஜிம்:
என்னடா செய்யப் போகிறார் என ஆர்வமாகப் பார்த்தால், இரண்டு கைகளால் பக்கவாட்டு சுவர்களைப் பிடித்துக் கொண்டு டிரட் மில்லில் ஓடுவது போல் ஓடுகிறார். இதன் மூலம் ஜிம்மில் பயன்படுத்தப்படும் டிரெட் மில் மூல்ம் பெறும் பயனை, வீட்டிலும் குறைந்த செலவில் பெற முடியும் என்பது தான் இந்த வீடியோ மூலம் அவர் சொல்ல வரும் கருத்து.

வைரல் வீடியோ:
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அப்பெண்ணின் புத்திசாலித்தனத்தை பாராட்டி வருகின்றனர். இதுவரை 21 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர். சுமார் 15 ஆயிரம் பேர் கமெண்ட் செய்துள்ளனர்.
|
முன்னெச்சரிக்கை தேவை:
ஆனால், நமக்கு ஒரு சந்தேகம். கடைசியில் அந்தப் பெண் எப்படி நின்றிருப்பார்? ஏனெனில் அதனை அவர் தனது வீடியோவில் காட்டவில்லை. அப்படியென்றால் நிச்சயம் விழுந்து புதையல் எடுத்திருப்பார் என்றே தெரிகிறது. எனவே, வீட்டில் அப்பெண்ணின் ஐடியாவை முயற்சித்துப் பார்ப்பவர்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications