இங்கிலாந்தில் உள்ள டொனால்ட் டிரம்பின் கோல்ப் ரிசார்டில் ஒரே இரவில் பெரிய சம்பவம்.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஸ்காட்லாந்தில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோல்ஃப் ரிசார்ட் பாலஸ்தீன ஆதரவு குழுவினரால் ஒரே இரவில் துவம்சம் செய்யப்பட்டுள்ளது. டிரம்பின் கோல்ஃப் மைதானத்தில் உள்ள புல்வெளி பகுதியில் " காசா விற்பனைக்கு இல்லை" என்று பிரம்மாண்டமாக வரைந்துள்ளனர். மேலும் கோல்ஃப் மைதானம் முழுவதும் குழிகள் தோண்டப்படுகின்றன. ட்ரம்ப் காசாவை தனது சொத்தாகக் கருத முயற்சிக்கும்போது, அவரது சொந்த சொத்து எங்களுக்கு எட்டக்கூடிய தூரத்தில் உள்ளது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும் என்று பாலஸ்தீன குழு எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் பிடிக்கப்பட்ட பணய கைதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இருதரப்புமே சில விஷயங்கள் முரண்பட்டு நின்றாலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

London Donald trump GAZA

இந்நிலயில் அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாலஸ்தீனத்தை நாங்கள் பிடிப்போம் என்று எச்சரித்தார், அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில், "காசா பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.இது கடைசி எச்சரிக்கை! காசாவில் இருக்கும் தலைவர்களே, இன்னும் வாய்ப்பு உள்ளது... காசாவில் இருந்து நீங்கள் கிளம்பும் நேரம் வந்துவிட்டது.

காசா மக்களே... உங்களுக்கு அழகான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் அது நடக்காமல் போகும். பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் நீங்கள் இருக்க மாட்டீர்கள்! ஸ்மார்ட் ஆன முடிவை எடுங்கள்" என்று கடுமையாக எச்சரித்திருந்தார். இந்த அறிவிப்பை கேட்டு அரபு நாடுகள்கொதித்து போய் உள்ளன.

டிரம்பின் இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் குழு இங்கிலாந்தின் நாட்டின் ஸ்காட்லாந்தில் உள்ள டர்ன்பெர்ரியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோல்ஃப் ரிசார்ட்டை ஒரே இரவில் துவம்சம் செய்திருக்கிறார்கள். ங

இன்று ஸ்காட்லாந்தின் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் படி, ஸ்காட்லாந்தில் உள்ள டர்ன்பெர்ரியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோல்ஃப் ரிசார்ட்டின் சுவர்களில் "காசாவை விடுங்கள்" மற்றும் "பாலஸ்தீனத்தை விடுங்கள்" என்ற வாசகங்களுடன் சிவப்பு வண்ணப்பூச்சு வரையப்பட்ட படங்களும், டிரம்பிற்கு எதிராகமோசமான வாசகங்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் "காசா விற்பனைக்கு இல்லை" என்று பசுமையான புல் தரையில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுளளது. மேலும் மைதானத்தில் நிறைய குழிகள் தோண்டப்பட்டுள்ளன" இந்த பதிவுகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+