குண்டு வெடித்ததை போல சத்தம்.. பீதியில் உறைந்த மக்கள்.. பிரிட்டனிலுள்ள டாடா ஸ்டீல் ஆலையில் விபத்து

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனிலுள்ள டாடா ஸ்டீல் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்தில் இரு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

பிரிட்டனின் தெற்கு வேல்ஸ் பிராந்தியத்தின், உள்ள போர்ட் டால்போட்டில், டாடா ஸ்டீல் லிமிட்டட் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார், 4000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், அங்கு இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Two injured in Tata Steel UK plant blast

இரு ஊழியர்கள் லேசான காயமடைந்ததாகவும், அவர்களுக்கு முதலுதவி செய்ய அவசர கால மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் டாடா நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. பெரிய அளவிலான காயம் இது இல்லை என்றும், முழு அளவில் விசாரணை நடத்தப்படுவதாகவும் டாடா நிறுவனம் கூறியுள்ளது.

ட்ரெயின் கருவி மூலமாக உருக்கப்பட்ட இரும்பை, ஆலைக்குள் கொண்டு சென்றபோது, திடீரென அது வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக சிறு அளவில் தீ உருவாகியுள்ளது. பின்னர், உடனடியாக தீ அணைக்கப்பட்டுள்ளது. ஆலைக்குள் இருந்த கட்டிடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், டால்போட் பகுதி மக்களோ, பெரிய வெடிகுண்டுகள் வெடித்ததை போல சத்தத்தை உணர்ந்ததாகவும், வீடுகள் அசைவுற்றதாகவும் தெரிவித்துள்ளனர். காலையிலேயே தாங்கள் பெரும் பீதிக்கு உள்ளானதாக உள்ளூர் மீடியாக்களிடம் அவர்கள் கூறுகிறார்கள்.

2007ம் ஆண்டு போர்ட் டால்போட் பகுதியிலுள்ள ஆலையை டாடா ஸ்டீல், 12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு, வாங்கியது. இருப்பினும் பிரிட்டனில் டாடாவின் வர்த்தகம் மந்தமாகவே உள்ளது. எனவே, பிரிட்டன் மற்றும் நெதர்லாந்திலுள்ள தனது தொழில்களை, தைஸ்சென்க்ரப் ஏஜியுடன் இணைக்க டாடா முடிவு செய்து பணிகளை ஆரம்பித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+