டிரம்ப் காருக்கு கீழே உட்கார்ந்து கொண்டு "டேக்கா" காட்டிய குட்டி பூனை!
அதிபர் டிரம்ப்பின் காருக்கு அடியில் 'ரெஸ்ட்' எடுத்த பூனை
லண்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் முரண்டு பிடித்தவர் என்றால்.. அவரைப் போலவே ஒரு பூனையும் முரண்டு பிடித்து களேபரப்படுத்தி விட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணிக்கவிருந்த சொகுசு காருக்குக் கீழே போய் உட்கார்ந்து கொண்ட லேரி என்ற பூனை வெளியே வராமல் முரண்டு பிடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இந்தப் பூனை காருக்குக் கீழே உட்கார்ந்து கொண்டிருந்த படம் இப்போது வைரலாகி விட்டது.
வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் டிரம்ப் இங்கிலாந்துக்கு 3 நாள் சுற்றுப் பயணம் வந்துள்ளார். வந்த இடத்தில் ராணி எலிசபெத்தின் முதுகில் தட்டிக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். இந்த நிலையில் ஒரு பூனை பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

காத்திருந்தனர்
அது இங்கிலாந்து பிரதமர் தெரசா மே வசித்து வரும் அதிகாரப்பூர்வ இல்லமான 10, டவுனிங் தெரு வீடு. அந்த வீட்டுக்கு முன்பு டிரம்ப் பயணிக்க வேண்டிய லிமோசின் சொகுசுக் கார் நின்றிருந்தது. டிரம்ப் வர வேண்டிய நேரம். அத்தனை பேரும் காத்திருந்தனர்.

செல்ல பூனை
அப்போதுதான் காருக்குக் கீழே ஏதோ ஒன்று அசைவதை பாதுகாவலர்கள் பார்த்தனர். என்னவென்று பார்த்தால் ஒரு பூனை உட்கார்ந்திருந்தது. அதன் பெயர் லேரி என்பதாகும். அந்தப் பூனை டவுனிங் தெருவில் நடமாடி வரும் ஒரு செல்லப் பூனையாகும். பிரதமர் வீட்டையே சுற்றிச் சுற்றி வரக் கூடியதாகும்.
|
பரபரப்பு
முன்பொருமுறை பில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது இங்கு வந்திருந்தார். அப்போது அவரது சாக்ஸுக்குள் போய் உட்கார்ந்து கொண்டது. இதனால் பெரும் பரபரப்பும், கலகலப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று டிரம்ப் காருக்குக் கீழே போய் உட்கார்ந்து கொண்டது. வெளியில் லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் லேரி, காருக்குக் கீழ் போய் விட்டதாக சொல்லப்படுகிறது.

பயணம்
ரொம்ப நேரமாக பூனையை வெளியே கொண்டு வர முயற்சித்துப் பார்த்தனர். ஆனால் லேரி வரவே இல்லை. இருப்பினும் லேரியால் டிரம்ப்பின் பயணம் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. லேரி எப்போது வெளியே போனது என்ற விவரமும் வெளியாகவில்லை. ஒரு வேளை டிரம்ப்பே வெளியே வந்து குணிந்து பார்த்து லேரியை வெளியேற்றினாரா என்பதும் தெரியவில்லை.

பூனை படம் வைரல்
டிரம்ப் காருக்குக் கீழே பூனை போய் ஒளிந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகியுள்ளது. டிரம்ப்பே வைரலாகத்தான் போய்க் கொண்டிருக்கிறார். இதில் இந்த பூனை வேறயா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications