லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாய் உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ரூ.5 லட்சம்.. சோறு போட்டு கை நிறைய சம்பளமும் கொடுக்கும் நிறுவனம்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் ஒன்று நாய் உணவை சாப்பிட்டு ருசி பற்றி தெரிவிக்கும் நபருக்கு ரூ.5 லட்சம் வழங்கி வருகிறது.

இந்த வேலைக்கு, தேர்வு செய்யப்படும் நபருக்கு என்று தனித்தகுதிகள் எதுவும் தேவையில்லை. ஆனால், நாய் உணவை சாப்பிட்டால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என உறுதி செய்திருக்க வேண்டுமாம்.

5 நாட்களுக்கு நாய் உணவை சாப்பிட்ட பிறகு சுவை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சில பெட்ரோல் கலால் வரி ரூ.9.48தான்... ஆனால் இப்போ? வரி குறைப்பு ஏமாற்று வேலை -காங்கிரஸ்காங்கிரஸ் ஆட்சில பெட்ரோல் கலால் வரி ரூ.9.48தான்... ஆனால் இப்போ? வரி குறைப்பு ஏமாற்று வேலை -காங்கிரஸ்

நாய் உணவு நிறுவனம்

நாய் உணவு நிறுவனம்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்னி என்ற நிறுவனம் நாய்கள் உண்ணும் உணவுகளைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் நாய்களுக்கு தாவரப் பொருட்களால் ஆன உணவைத் தயாரிக்கிறது. அந்த உணவு பொருட்களில் சர்க்கரைவள்ளிக் கிழங்குகள், பருப்புகள், பூசணிக்காய் போன்ற காய்களும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பழங்களும் மற்றும் பட்டாணி, பழுப்பு அரிசி போன்றவையும் கலந்திருக்கும்.

சாப்பிட்டால் ரூ. 5 லட்சம்

சாப்பிட்டால் ரூ. 5 லட்சம்

இந்த நிறுவனம் தயாரிக்கும் நாய்களுக்கான உணவைச் சுவைத்து அதுபற்றிய விவரங்களை தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் தரப்படுகிறது. இந்த வேலைக்கு, தேர்வு செய்யப்படும் நபருக்கு என்று தனித்தகுதிகள் எதுவும் தேவையில்லை. ஆனால், நாய் உணவை சாப்பிட்டால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என இந்த வேலைக்கு வருவோர் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை ஒவ்வாமை ஏற்பட்டால் அதுபற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

5 நாட்களுக்கு

5 நாட்களுக்கு


இந்த நாய் உணவை 5 நாட்களுக்கு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு, சாப்பிட்ட அனுபவம், உணவின் சுவை மற்றும் உண்ணும்போது ஏற்பட்ட மனநிலை மற்றும் செரிமான பிரச்சனைகள் எதுவும் ஏற்பட்டதா என்பது பற்றிய விவரங்களை நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம் என ஆம்னி நிறுவனம்தெரிவித்துள்ளது.

நாங்களே சாப்பிடுவோம்

நாங்களே சாப்பிடுவோம்

ஆம்னி நிறுவனத்தின் துணை நிறுவனரான ஷிவ் சிவகுமார் கூறுகையில், எங்கள் நிறுவன தயாரிப்புகள் தூய்மையானவை. அதில் ரகசிய பொருட்கள் எதுவும் கலக்கப்படவில்லை. அனைத்து நாய் உணவும் மனிதர்கள் உபயோகிக்கும் உணவு பொருட்களையே கொண்டிருக்கின்றனர். மனிதர்களும் இதனை உண்ணலாம். அதன் காரணமாகவே எங்கள் தயாரிப்புகளை சுவைத்து பார்க்க சம்பளம் கொடுத்து ஆட்களை வைத்திருக்கிறோம். இந்த தயாரிப்புகள் நான் உள்ளிட்ட நிறுவனத்தில் பணியாற்றும் பலரும் சாப்பிட்டிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Pet food company pays Rs.5 lakhs to eat dog foof for 5 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X