அமோக வெற்றி.. பிரிட்டன் தேர்தலில் ரிஷி சுனக் கட்சியை ஊதித்தள்ளிய லேபர் கட்சி! புது பிரதமர் இவர்தான்
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தொடக்கம் முதலே பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பின்தங்கி உள்ளதோடு படுதோல்வி அடையும் சூழலில் உள்ளது. மாறாக கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி முன்னிலை வகித்து வருவதோடு தேர்தலில் அமோக வெற்றியை நோக்கி செல்கிறது. இதனால் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் நிகழவும், ரிஷி சுனக்கிற்கு பதிலாக கீர் ஸ்டார்மர் பிரதமராகிறார்.
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இத்தகைய சூழலில் தான் பிரிட்டனில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் (Labour Party) கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் திட்டமிட்டப்படி நேற்று ஒரே கட்டமாக பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதன்படி இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வால்ஸ் மற்றும் நார்தன் அயர்லாந்து உள்ளிட்ட இடங்களில் நேற்று அமைதியாக தேர்தல் நடந்தது. பிரிட்டன் நேரப்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் நடந்தது.
வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுச்சீட்டில் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களின் பெயருக்கு நேராக X என்று குறித்து வாக்கு செலுத்தினர். இதையடுத்து இன்று காலை முதல் ஓட்டு எண்ணிக்கை என்பது விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது. நம் நாட்டின் நேரப்படி காலை காலை 7 மணிக்கு கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 38 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 3 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. மேலும் லிபரல் டெமாக்டரட்ஸ் என்ற கட்சி 2 இடங்களிம், ரீஃபார்ம் யுகே என்ற கட்சி 1 இடங்களிலும், ஸ்காட்டிஸ் நேஷனல் கட்சி, பிளேட் சைக்ரு கட்சி, கிரீன் கட்சி ஆகியவை இன்னும் அக்கவுண்ட்டை திறக்காமல் இருந்தன.
காலை 9 மணி நிலவரப்படி கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 255 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.. பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 45 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. அதேபோல் லிபரல் டெமாக்டரட்ஸ் கட்சி 32 இடங்களிலும், ஆர்இஎஃப், எஸ்என்பி கட்சிகள் தலா 4 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது.
காலை 10 மணி நிலவரப்படி தொழிலாளர் கட்சி தனி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 359 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மாறாக பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 79 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் லிபரல் டெமாக்ட்ரட்ஸ் கட்சி 48 இடங்களிலும், எஸ்எஸ் 6 இடங்களிலும் மற்றவர்கள் 23 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளன. இதன்மூலம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை இழக்கிறது. தொழிலாளர் கட்சி வென்ற நிலையில் அதன் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரதமராகிறார்.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் என்பது ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பிரிட்டன் தேர்தலில் தோல்வியை படுதோல்வி அடைந்து 14 ஆண்டு ஆட்சியை இழக்கும் என்றும், கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில் தான் கருத்து கணிப்புகளின் படி பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனால் தேர்தல் தோல்வியால் தற்போதைய பிரதமரான கன்சர்வேட்டிவ் கட்சியின் ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்வார். மாறாக பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications