24 மணி நேரம் தான் டைம்.. பிரதமர் குடியிருப்பை காலி செய்யும் ரிஷி சுனக்.. அடுத்து Kissing hands தான்!
லண்டன்: பிரிட்டன் நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். ஆனால், நமது நாட்டை போலப் பிரிட்டனில் குடியரசுத் தலைவர் இல்லை. அப்போது ரிஷி சுனக் யாரிடம் ராஜினாமா கடிதம் கொடுப்பார். கெய்ர் ஸ்டார்மருக்கு யார் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று கேள்வி வரலாம். இது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு ரிஷி சுனக் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குத் தொழிலாளர் கட்சி ஆட்சியை அமைத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வந்தாகிவிட்ட நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அடுத்து என்ன: ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொண்ட ரிஷி சுனக் தோல்வி அடைந்துள்ள நிலையில், அடுத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க இருக்கிறார். நமது நாட்டில் குடியரசுத் தலைவரிடம் தான் ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பார்கள். ஆனால், பிரிட்டன் நாட்டில் குடியரசுத் தலைவர் இல்லாத நிலையில், அந்நாட்டின் மன்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளிப்பார்கள். இப்போது பிரிட்டன் மன்னராக சார்லஸ் இருக்கும் நிலையில், அவரிடமே ரிஷி சுனக் ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பார்.
24 மணி நேரம்: பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்பவர்கள் பொதுவாக 10 டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் தான் இருப்பார்கள். பிரிட்டன் பிரதமரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகமாக இங்கு தான் இருக்கிறது. அமெரிக்காவுக்கு எப்படி வெள்ளை மாளிகையோ அதுபோல பிரிட்டனுக்கு இந்த வளாகம். இதில் தான் ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான 24 மணி நேரத்தில் இந்த வளாகத்தை ரிஷி சுனக் காலி செய்ய வேண்டும்.
Kissing hands: மற்றொரு புறம் ரிஷி சுனக்கின் ராஜினாமா கடிதத்தை மன்னர் ஏற்றுக் கொள்வார். அடுத்து அவர் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கெய்ர் ஸ்டார்மரை பிரதமராகப் பதவியேற்க அழைப்பார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடக்கும் கூட்டத்தில் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்றுக் கொள்வார். இதைத் தான் Kissing hands எனக் குறிப்பிடுவார்கள்.
இந்த Kissing hands என்பது பழங்காலத்து நடைமுறை. அப்போது மன்னர் அல்லது ராணி.. யார் தலைமைப் பொறுப்பில் இருக்கிறாரோ அவரது கைகளில் பிரதமராகப் பதவியேற்போர் முத்தமிடுவார்கள். ஆனால், முத்தமிடும் நடைமுறை இப்போது இல்லை என்ற போதிலும் Kissing hands என்ற சொல் மட்டும் தொடர்கிறது.
10 டவுனிங் ஸ்ட்ரீட்: அதன் பின்னர் பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வமான குடியிருப்பான 10 டவுனிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு புதிய பிரதமர் திரும்புவார். அவர் அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது அவர் கூறும் கருத்துகள் மிக முக்கியமாக உற்று நோக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிரிட்டன் எந்த பாதையில் பயணிக்கப் போகிறது என்பதைக் காட்டுவதாகவே இது இருக்கும்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முக்கிய எம்பிக்களை டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார். அதைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications