"புரோட்டீன் டிரிங்.." குடித்த உடன் சரிந்த 16 வயது சிறுவன்! பரிதாபமாகப் போன உயிர்.. என்ன காரணம்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் புரோட்டீன் பானத்தைக் குடித்த 16 வயது சிறுவன் திடீரென உயிரிழந்த நிலையில், இது தொடர்பாகப் பிரிட்டன் அதிகாரிகள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மாறி வரும் இந்த நவீன உலகில் அனைத்துமே மின்னல் வேகத்தில் மாறி வருகிறது. குறிப்பாக இப்போது நாம் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

இதனால் ஜிம்மிற்கு சென்று உடலைப் பிட்டாக வைத்திருப்பது கஷ்டமாகிறது. ஜிம்மிற்கு செல்வது உடலுக்கு ரொம்பவே நல்லதுதான் என்றாலும், தேவையற்ற புரோட்டீன் பானங்களை எடுத்துக் கொள்வது எந்தளவுக்கு ஆபத்து என்பதைக் காட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இளைஞன் பலி: பிரிட்டன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுவன் ரோஹன் கோதானியா. அவர் லண்டன் மாநகரில் வசித்து வந்தார். 16 வயதான இந்த சிறுவன் புரோட்டீன் ஷேக்கைக் குடித்துள்ளார். இருப்பினும், கொஞ்ச நேரத்தில் அந்த சிறுவன் நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து அவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெஸ்ட் மிடில்செக்ஸ் மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், அவருக்குச் சரி செய்யவே முடியாத மூளை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அந்த இளைஞனுக்கு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்கள் கண்டறியும் முன்னரே அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. உயிரிழந்த அந்த சிறுவன் மிகவும் ஒல்லியாக இருந்ததால், அவனது தந்தை தனது மகனுக்கு உடலை வளர்க்க புரோட்டீன் ஷேக்கைக் வாங்கி வந்துள்ளார்.
உயிரிழப்பு: தந்தை வாங்கி வந்த அந்த புரோட்டீன் ஷேக்கே மகனுக்கு எமனாக அமைந்துவிட்டது. புரோட்டீன் ஷேக் அந்த சிறுவனுக்கு ஆர்னிதைன் டிரான்ஸ்கார்பமைலேஸ் (OTC) குறைபாடு எனப்படும் ஒரு அரிய மரபணு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ரோஹனின் ரத்த ஓட்டத்தில் இருந்த அம்மோனியாவை பிரேக்அவுட் செய்துள்ளது.
இதுவே அவனது உடல்நிலை மிக மோசமான நிலைக்குச் செல்ல காரணமாக அமைந்துவிட்டது. இந்தச் சம்பவம் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் நடந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பான முக்கிய தகவல்கள் இப்போது தான் வெளியாகியுள்ளது.
என்ன காரணம்: முதலில் சிறுவனின் மரணத்திற்கு இந்த அரிய நோயான ஆர்னிதைன் டிரான்ஸ்கார்பமைலேஸ் (OTC) குறைபாடு காரணம் என்பதைப் பிரேதப் பரிசோதனையில் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், உடலில் இருந்த அம்மோனியாவே காரணம் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். புரோட்டீன் அதிகளவில் இருப்பதும் இதை ஏற்படுத்தும் என்பதால் சிறுவன் நோ்வாய்படும் முன்பு குடித்த புரோட்டீன் ஷேக் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சிறுவன் உயிரிழப்பிற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ள நிலையில், புரோட்டீன் பானங்களில் சுகாதார எச்சரிக்கை சேர்க்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் மூத்த அதிகாரி கரோனர் டாம் ஆஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.
கரோனர் டாம் ஆஸ்போர்ன் மேலும் கூறுகையில், "முதற்கட்டமாக வைத்துப் பார்த்தால் புரோட்டீன் டிரிங்க்ஸ் இதற்குக் காரணமாக இருக்கலாம். OTC அரிதானது என்றாலும். இதனால் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்த எச்சரிக்கையை நாம் அதில் குறிப்பிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications