கடந்த ஆண்டு குழந்தை.. இந்தாண்டு திருமணம்.. ரகசியமாக காதலியை மணந்தார் போரிஸ் ஜான்சன்!
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் அவரது காதலி ஹேரி சைமண்ட்ஸுக்கும் இடையே இன்று ரகசிய திருமணம் நடைபெற்றது.
இங்கிலாந்து பிரதமராக உள்ளவர் போரிஸ் ஜான்சன் (56). இவர் தனது காதலியான ஹேரி சைமண்ட்ஸ் (33). இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு வில்பிரட் லாரி நிகோலஸ் ஜான்சன் என்ற ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அறிவித்தனர். இந்த நிலையில் இருவரும் இன்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெஸ்ட்மின்ஸ்டர்
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள ஒரு சர்ச்சில் இவர்களது திருமணம் நடந்தது. இருவரும் சர்ச்சிற்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சர்ச் பூட்டப்பட்டது. பின்னர் பொதுமக்கள் வெளியேறிய பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கெனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகியுள்ளது.

இரண்டாது
எனவே ஹேரியுடன் நடந்த திருமணம் போரிஸுக்கு மூன்றாவது திருமணம் ஆகும். போரிஸ் ஜான்சனுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். போரிஸின் தனிப்பட்ட வாழ்வில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் அவரை பாங்கிங் போரிஸ் என்றே ஊடகங்கள் அழைத்தன.

நீக்கம்
இந்த நிலையில் திருமணத்திற்கு மீறிய உறவை வைத்திருந்ததால் அவரது கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போது நீக்கப்பட்டார். அவர் இரு முறை விவாகரத்து செய்தாலும் அவருக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார்.

திருமணத்திற்கு முன்பே
போரிஸ் கடைசியாக மேரினா வீலர் என்ற வழக்கறிஞரை மணந்தார். அவர்களுக்கு 4 குழந்தைகள் இருவரும் கடந்த 2018இல் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். தற்போது திருமணம் செய்து கொண்ட காதலியுடன் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டார் போரிஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications