சின்ன தப்புக்கே இப்படியா? வார்த்தையை விட்ட ரிஷி சுனக்.. வறுத்தெடுத்த இங்கிலாந்து மக்கள்.. என்னாச்சு?
லண்டன்: இங்கிலாந்தின் அடுத்த பிரதமருக்கான ரேஸில் முன்னிலை வகிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், தொலைக்காட்சி விவாதத்தின் போது தனக்கு பின்னால் இருந்த பேனரில் கேம்பைன் (பிரசாரம்) என்ற வார்த்தையில் தவறான ஸ்பெல்லிங் இருந்துள்ளது. தற்போது இதை சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், ரிஷி சுனக்கை ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கு சற்று நேரத்தில் ரிஷி சுனக் தக்க பதிலடி கொடுத்து நெட்டிசன்களை மேலும் சூடாக்கியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு காலக்கட்டத்தின் போது அதை மீறி கேளிக்கை விருந்தில் ஈடுபட்டது, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவரை முக்கிய பதவியில் நியமித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதனால், சொந்த கட்சியினர் மத்தியிலேயே போரிஸ் ஜான்சனுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், கடந்த 7-ந் தேதி போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

முதலிடத்தில் ரிஷி சுனக்
இதையடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறை இங்கிலாந்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான ரேசில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்றில் ரிஷிக் சுனக் எதிர்பார்த்தது போலவே முன்னிலை வகித்த நிலையில், 2-வது சுற்றிலும் 101 வாக்குகள் பெற்று ரிஷி சுனக் முதலிடம் பிடித்துள்ளார். ரிஷி சுனக்கிற்கு கடும் போட்டியாளராக உள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டவுட்ன் 83 வாக்குகளும், வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் 64 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். இதனால், அடுத்த சுற்று போட்டிக்களம் அனல் பறக்கிறது.

ஸ்பெல்லிங் தவறு
இதனிடையே தனக்கு ஆதரவு திரட்டும் வகையில், ரிஷி சுனக் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டார். சூடாக நடைபெற்ற இந்த விவாதத்தின் போது ரிஷி சுனக்கிற்கு பின்னால், அவரது பிரசாரத்தை குறிப்பிடும் வகையில் கேம்பைன் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. அதில் 'CAMPIAIGN' என தவறுதலாக வார்த்தை இடம் பெற்று இருந்தது. 'campaign' என்பதே சரியானது என்ற நிலையில், இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ஆசைப்படும் ஒருவர் இவ்வளவு அஜாக்கிரதையாக ஸ்பெல்லிங் தவறுகளை விடுகிறாரே என நெட்டிசன்கள் அவரை டிரோல் செய்யத் தொடங்கினர்.

வச்சு செய்யும் நெட்டிசன்கள்
அதில் ஒருவர் ''ஸ்பெல்லிங் விவகாரத்தை தவிர பிற அனைத்திலும் ரிஷி சுனக் மிகவும் விசாலமான பார்வை கொண்டவர்" என கேலியாக பதிவிட்டுள்ளார். பிரசாரத்தை தவறாக எழுதிய பலகையின் முன்னால் அமராமல், ரிஷி சுனக் தனது சொந்த திறமை குறித்து தற்பெருமை பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என இன்னொருவர் பதிவிட்டு இருந்தார். இவ்வாறாக பலர் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக நினைக்கும் ரிஷி சுனக்கை டிரோல் செய்து வருகின்றனர்.

வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா ரிஷி சுனக் மனைவி?
ஏற்கனவே, கொரோனா பெருந்தொற்று சமயத்தில் வரி விதிப்பு தொடர்பாக ரிஷி சுனக் எடுத்த நடவடிக்கையை பல தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அவர்களது விமர்சனத்திற்கு தீனி போடும் வகையில் மற்றொரு சம்பவமாக இது அமைந்தது. இதேபோல் இன்போசிஸ் நிறுவனர் நாராயண் மூர்த்தி மகளும் ரிஷி சுனக் மனைவியுமான அக்ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுட்டதாகவும் ரிஷி சுனக்கிற்கு எதிரான விமர்சனங்களில் ஒன்றாக வைக்கப்பட்டு வருகிறது.

விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிஷி சுனக்
இந்த நிலையில், ஸ்பெல்லிங் மிஸ்டேக் குறித்து தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ரிஷி சுனக், தவறை திருத்திக்கொள்ள தயார் எனப்பொருள் படும் வகையில், ''எழுத்துப்பிழை சரிபார்ப்புக்கு தயார்'' என்று பதிலடி கொடுத்து இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்ர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications