டிரம்பை விடுங்க.. பெரிய செக் வைத்த பிரிட்டன்! பல லட்சம் இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கு சிக்கல்
லண்டன்: ஒரு பக்கம் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களுக்கு எதிராகவும் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே இப்போது மற்றொரு நாடும் குடியேற்றத்தைக் கடுமையாக்கும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. இது அங்கு வசிக்கும் இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டினருக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கும்.
அமெரிக்காவில் அதிபராகப் பதவியேற்றது முதலே டிரம்ப் குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே டிரம்ப் எடுத்தார். ஆனால், அதன் பிறகு சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

பிரிட்டன்
இதற்கிடையே இப்போது பிரிட்டனும் அதேபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினர் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதை விரும்பவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் புதிய கொள்கைகளை அறிவித்தார். அதில் பல கடுமையான விதிகள் இருந்தது.
பழைய விதிகளின்படி, வெளிநாட்டினர் பிரிட்டனில் 5 ஆண்டுகள் வசித்தாலே நிரந்தரமாகத் தங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், இப்போது அந்த காலவரை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் பிரிட்டனில் 10 ஆண்டுகள் வசித்த பிறகே வெளிநாட்டினர் நிரந்தரமாகத் தங்க அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும்.
இந்தியர்களுக்குச் சிக்கல்
கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியிடப்படப் பிரிட்டனின் அதிகாரப்பூர்வ டேட்டாவின்படி, அங்கு அதிகளவில் வசிக்கும் வெளிநாட்டினர் என்றால் அது இந்தியர்கள் தான். கல்வி, வேலைவாய்ப்பு என அங்கு சுமார் 2.5 லட்சம் பேர் பிரிட்டனுக்குச் செல்கிறார்கள். அப்படியிருக்கும் போது பிரிட்டன் அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டம் இந்தியர்களை அதிகம் பாதிக்கும்.
இது மட்டுமின்றி தொழிலாளர் விசாவிற்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த பிரிவில் விண்ணப்பிக்க முதலில் ஏ-லெவலுக்கு சமமான படிப்பு அல்லது தகுதி இருந்தால் போதும் எனக் கூறப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது கட்டாயம் டிகிரி வைத்திருப்போர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள் எனத் தகுதியும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஸ்டார்மர்
எல்லைகளின் கட்டுப்பாட்டை மீண்டும் அரசு எடுக்கும் எனக் குறிப்பிட்ட அந்நாட்டின் பிரதமர் ஸ்டார்மர், அதிகரித்து வரும் குடியேற்றத்தைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றார். குடியேற்றத்தை எந்தளவுக்குக் குறைக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளீர்கள் எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்குப் பதிலளிக்கப் பிரதமர் ஸ்டார்மர் மறுத்துவிட்டார்.
உச்சவரம்பு இல்லை
ஒவ்வொரு ஆண்டும் இத்தனை வெளிநாட்டினரை மட்டுமே அதிகரிக்கும் வகை உச்ச வரம்பைக் கொண்டு வர வேண்டும் என அங்குள்ள கன்சர்வேடிவ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், அந்த கோரிக்கையையும் பிரதமர் ஸ்டார்மர் ஏற்க மறுத்துவிட்டார். அரசின் நடவடிக்கைகளால் குடியேற்றம் கணிசமாகக் குறையும் என்று உறுதியளிக்கிறேன் என்று மட்டும் பதிலளித்தார்.
ஏற்கனவே, பிரிட்டனில் வருடாந்திர குடியேற்றம் 10% சரிந்துள்ளது. இருப்பினும், பிரிட்டனுக்கு வருவோரில் சுமார் 85% பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராதவர்கள். மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும். இதனால் அங்குக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விதிகளை அறிவிக்க வேண்டும் என்ற வாய்ஸ் அதிகரித்த நிலையில், இப்போது கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications