அச்சுறுத்தலுக்கு நடுவே ‛ஐ லவ் யூ‛.. இம்ரான் கானின் 4வது மனைவியாக துடிக்கும் பிரபலம்! யாரு தெரியுமா
லண்டன்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் ஆட்சியை இழந்தார். இதையடுத்து இம்ரான் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என கூறப்படும் நிலையில் தான் அவரது 4வது மனைவியாக விரும்புவதாக பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலககோப்பை வென்றபோது கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். பாகிஸ்தான் தெக்ரி இ-இன்ஷெப் கட்சியை தொடங்கி செயல்பட்டு வந்தார்.

பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இம்ரான் கான் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து இம்ரான் கான் பிரதமரானார். இந்நிலையில் தான் அவருக்கு ஆதரவு வழங்கிய சில கட்சிகள் கடந்த ஆண்டு ஆதரவை விலக்கி கொண்டன. இதையடுத்து நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்று இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார்.
இதையடுத்து பாகிஸ்தான் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவராக உள்ள ஷேபாஸ் ஷெரீப் புதிய பிரதமரானார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஆவார். இந்நிலையில் தான் இம்ரான் கான் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட் வருகின்றன. இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இம்ரான் கான் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் காதிர் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்கில்அவர் சமீபத்தில் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இம்ரான் கானை கொல்ல திட்டமிடப்பட்டதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து அம்மாநில உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். தற்போதைய சூழலில் இம்ரான் கானின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இங்கிலாந்தின் பிரபல டிக்டாக் பிரபலம் ஒருவர், இம்ரான் கானை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அதோடு இம்ரான் கான் தனது 3வது மனைவி புஷ்ரா பீபி உடனான திருமணத்தை முறித்து கொண்டு வந்தால் 4வது மனைவியாகவும், அவரது வாழ்க்கையில் கிளாமராக மாற்றும் மனைவியாகவும் வர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை கூறிய டிக்டாக் பிரபலத்தின் பெயர் ஜியா கான். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‛‛நான் இம்ரான் கானை திருமணம் செய்ய விரும்புகிறேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு 70 வயது நிரம்புகிறது என்பதை பற்றிய சிந்தனை எல்லாம் எனக்கு இல்லை. இம்ரான் கான் தனது 3வது மனைவி புஷ்ரா பீபியை பிரிந்து வந்தால் நான் அவரது 4வது மனைவியாக மாற தயாராக இருக்கிறேன். மேலும் அவரது வாழ்க்கையில் இன்னும் கிளாமர் தேவை. இதற்கான மனைவியாக நான் இருப்பேன்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் ‛‛இம்ரான் கான் முதலில் ஜெமிமாவை திருமணம் செய்தார். அதன்பிறகு அழகான பத்திரிகையாளர் மனைவியாக இருந்தார். தற்போது மத நம்பிக்கையுள்ள மனைவி உள்ளார். இம்ரான் கானின் வாழ்க்கைக்கு கிளாமரும், குறும்பான மனைவியும் தான் தற்போது தேவை'' எனவும் கூறியுள்ளார்.
இம்ரான் கான் தற்போது வரை 3 திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியின் பெயர் ஜெமிமா. அதன்பிறகு பத்திரிகையாளர் ரெஹம் கான் என்பவரை 2014ல் திருமணம் செய்தார். இவரை விவாகரத்து செய்த பிறகு 2018 ல் புஷ்ரா பிபி என்பவரை திருமணம் செய்தார். தற்போது புஷ்ரா பிபி உடன் இம்ரான் கான் வாழ்ந்து வரும் நிலையில் தான் டிக்டாக் பிரபலம் ஜியா கான் இப்படி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications