குளியலறையில் புகுந்த காமுகன்.. "ஜாலியா இருக்க வந்தேன்" என இறுமாப்பு! கோர்ட்டில் அம்பலமான பகீர் உண்மை

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனின் வால்சால் பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டிற்குள் வைத்து மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இப்போது பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.. பெண்ணின் வீட்டிற்குள்ளேயே புகுந்து இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டது குறித்துப் பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றம் கடும் கண்டிப்புத் தெரிவித்துள்ள நிலையில், இந்த அதிர்ச்சி தகவல்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சம்பவம் பிரிட்டனில் நடந்தது.. அங்குள்ள பர்மிங்காம் வால்சால் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஆஷ்பி.. 32 வயதாகிறது.. வேலை வெட்டிக்கு போகாமல், ஊரை சுற்றுவது மட்டுமே இவரது தொழில்.. மகா முரட்டுக்காரன். நாடோடி போல சுற்றித்திரிபவர். இவருக்கென்று வீடு வாசல் எதுவும் இல்லை.

Birmingham Court Trial John Ashby Rape Case Walsall Bathroom Attack Unbelievable Twist News

பிரிட்டன் பெண்ணை விரட்டிய ஜான்

சம்பவத்தன்று வால்சால் பகுதியில், அதே பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், பஸ்ஸில் இருந்து இறங்கி தனது வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த ஜான் ஆஷ்பி, அந்தப் பெண்ணை ரகசியமாக ஃபாலோ செய்துள்ளார்..

பெண்ணின் வீட்டுக்குள் ஆஷ்பியும் நுழைந்துள்ளார்.. அந்த பெண் குளியலறைக்கு சென்றதுமே, உடனே ஆஷ்பி வெளியே கிடந்த ஒரு மரக்குச்சியை எடுத்துக்கொண்டு ஆஷ்பியும் அத்துமீறி குளியலறை வாசலில் போய் நின்றார்.. திடீரென ஒரு நபர் எதிரே நிற்பதை கண்டு அறிய அந்த பெண், கதவை பூட்ட முயன்றார்.. ஆனால் ஆஷ்பி, கதவை எட்டி உதைத்துத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்..

குளியலறையில் நுழைந்து டார்ச்சர்

பிறகு பாத்ரூம் விளக்கை அணைத்துவிட்டு, "என் பெயர் ஜான்.. உன்னுடன் ஜாலியாக இருக்க வந்திருக்கிறேன்" என்று சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு பயந்துபோன அந்தப் பெண் அலறி கத்தியுள்ளார்.. உடனே ஆஷ்பி கையில் வைத்திருந்த குச்சியால் அந்தப் பெண்ணைச் சரமாரியாகத் தாக்கியதுடன், அவரது கழுத்தை நெரித்து வலுக்கட்டாயமாக குளியலறை தொட்டிக்குள் ஏறுமாறு சித்திரவதை செய்துள்ளார்..

அந்தப் பெண் உயிருக்குப் போராடியும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் ஆஷ்பி தனது வக்கிர புத்தியைக் காட்டியுள்ளார்.. பிறகு பக்கெட்டில் குளிப்பதற்காக வைத்திருந்து சுடு தண்ணீரை எடுத்து, பெண்ணின் மீது ஊற்றிய ஆஷ்பி, "மாஸ்டர் மாஸ்டர் ன்னு என்னை கூப்பிடு" என்று அடித்து துன்புறுத்தி உள்ளார்..

அந்தப் பெண்ணைப் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த ஆஷ்பி, படுக்கையறைக்கு இழுத்து சென்று மீண்டும் சித்ரவதை செய்ய முயன்றுள்ளார்.. உயிருக்குப் பயந்து அந்தப் பெண் வாசல் வரை ஓடித் தப்பிக்க முயன்றும், விடாமல் துரத்திச் சென்று அவரை மீண்டும் வீட்டுக்குள் இழுத்துப் போட்டு தாக்கி உள்ளார்..


போலீசாரிடம் சிக்கிய தடயம்

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வர துவங்கினார்கள்.. உடனே பயந்துபோன ஆஷ்பி, அங்கிருந்து தப்பி ஓடினார்.. அப்படி ஓடும்போது பெண்ணின் நகை, காஸ்ட்லி செல்போனைத் திருடிக்கொண்டு எகிறி தப்பிவிட்டார். இந்த விவகாரம் குறித்து போலீசுக்கு புகார் தரப்பட்டது.

விரைந்து வந்த போலீசார், வீட்டை ஆய்வு செய்தபோது, ஆஷ்பி கொண்டு வந்த சில பொருட்கள், டூத் பிரஷ் மூலம் கிடைத்த டிஎன்ஏ மற்றும் கைரேகை ஆதாரங்கள் போன்றவற்றை திரட்டினார்கள்.. போதாக்குறைக்கு அந்த பெண்ணும், ஆஷ்பியை சரியாக அடையாளம் காட்டினார்

ஆனால் போலீசார் ஆஷ்பியைப் பிடித்து விசாரித்தபோது, தனக்கு எதுவுமே தெரியாது எனச் சாதித்துள்ளார்..
இந்த விவாகரம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது.. "நான் ஜான்.. ஜாலியாக இருக்க வந்துள்ளேன்" என்று ஆஷ்பி சொன்னது. பாதிக்கப்பட்ட பெண்ணை எந்த அளவிற்கு மனரீதியாகச் சிதைத்திருக்கும் என்பதை வழக்கறிஞரும் சுட்டிக்காட்டினார்.

கண்டித்த கோர்ட்

அனைத்தையும் கேட்ட நீதிபதி கொந்தளித்து விட்டார்:- ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திற்குள் புகுந்து இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டது குறித்து தன்னுடைய கடும் கண்டனத்தை பதிவுசெய்தார்.. ஒரு பெண்ணின் சொந்த வீட்டிற்குள்ளேயே நுழைந்து, குளியலறை வரை பின்தொடர்ந்து சென்று தாக்கியது சற்றும் ஏற்க முடியாதது என்று கோர்ட் சாடியது..

இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.. தற்போது டிஎன்ஏ ஆதாரங்கள் ஆஷ்பிக்கு எதிராக மிக வலுவாக இருப்பதால், அவருக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.. !!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+