Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு.. வெளிநாடு ஓடிய விஜய் மல்லையா மகனுக்கு.. லண்டனில் கோலாகலமாக திருமணம்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியாவில் ரூ. 9000 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. இவர் இப்போது பிரிட்டனில் புகலிடம் கோரியுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சி தனியாக நடந்து வரும் நிலையில், அவரது பையன் சித்தார்த்த மல்லையாவுக்கு இப்போது லண்டனில் வெகு சிறப்பாகத் திருமணம் நடந்துள்ளது.

நமது நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் விஜய் மல்லையா.. மதுபானம், விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் நமது நாட்டில் நடத்தி வந்தார்.

Vijay Mallya London world

மல்லையா: இவர் நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ 9,000 கோடி கடன் பெற்றிருந்தார். இருப்பினும், அந்த கடனை திரும்ப அடைக்க முடியாமல் விஜய் மல்லையா நாட்டை விட்டே 2016ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிப் போய்விட்டார் விஜய் மல்லையா. நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா நிதி மோசடியாளர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன் பிறகு அவர் அப்படியே பிரிட்டன் நாட்டில் பதுங்கினார். அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இப்போது வரை அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. இதில் சட்டச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கும் பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சித்தார்த்த மல்லையா: இது ஒரு பக்கம் இருக்க இந்த விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்த மல்லையாவுக்கு இன்று லண்டனின் கோலாகலமாகத் திருமணம் நடந்துள்ளது. 37 வயதான சித்தார்த்த மல்லையா தனது காதலி ஜாஸ்மினை நேற்று சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். லண்டன் அருகே நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணம் தொடர்பான படங்களைச் சித்தார்த்தா மல்லையா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

சித்தார்த்தா பச்சை நிற வெல்வெட் டக்ஷீடோ அணிந்துள்ளார். அவரது மனைவி ஜாஸ்மின் முற்றிலும் வெள்ளை நிற கவுன் அணிந்துள்ளார். அதேபோல ஜாஸ்மினும் திருமண போட்டக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

திருமணம்: சித்தார்த்தா மல்லையா மற்றும் ஜாஸ்மின் ஜோடி ஒரு வருடத்துக்கும் மேலாக டேட்டிங் செய்து வந்தனர். இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பரில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு ஸ்பெஷல் கிப்ட்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மணமகள் ஜாஸ்மின் பற்றி பெரிதாக எந்தவொரு தகவலும் இல்லை.. இருப்பினும் ஜாஸ்மின் இன்ஸ்டாகிராம் ஐடிபடி, அவர் அமெரிக்காவில் வசிக்கிறார். ஹாரி பாட்டர் ரசிகர் என்றும் உணவுப் பிரியர் என்றும் ஜாஸ்மின் தனது ஐடியில் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனம்: சித்தார்த்தா மல்லையா திருமணத்திற்கு ஒரு தரப்பினர் வாழ்த்து சொல்லி வருகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர், கடன் வாங்கிவிட்டுத் தப்பியோடிய நபருக்கு இவ்வளவு ஆடம்பரமாகத் திருமணம் நடப்பதாகச் சாடினர். மேலும், மல்லையாவை உடனடியாக இந்தியா அழைத்து வர வேண்டும் என்றும் அவர் வாங்கிய கடனை முதலில் வசூலிக்க வேண்டும் என்றும் பலரும் சாடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+