அரசு அமைப்புகளும் வங்கிகளும் இப்படித்தான்.. சித்தார்த்தா இறப்பை வைத்து சந்தில் சிந்து பாடும் மல்லையா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Mallya on Siddhartha | அரசு அமைப்புகளும் வங்கிகளும் இப்படித்தான்.. சித்தார்த்தா பற்றி மல்லையா-வீடியோ

    லண்டன்: அரசு அமைப்புகளும் வங்கிகளும் இப்படிதான் ஒரு மனிதனை விரக்தி நிலைக்கு கொண்டு செல்லும் என சித்தார்த்தாவின் மரணம் குறித்து விஜய் மல்லையா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

    காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தாவுக்கு ஆரம்பத்தில் கொள்ளை லாபம் கிடைத்தது. எனினும் 2017-இல் இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதிலிருந்து அவரது வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது.

    Vijaya Mallya says that the Govt Agencies and Banks can drive anyone to despair

    இவருக்கு 7000 கோடி கடனில் தத்தளித்து வந்தார். சித்தார்த்தாவின் நிறுவன பங்குகளை வாங்கிய பங்குதாரர் ஒருவர் அந்த பங்குகளை திருப்பி வாங்கிக் கொள்ளுமாறு நெருக்கடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் நிறுவனத்தை விற்பதற்காக கோகோ கோலா நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இன்று காலை கரை ஒதுங்கியது. பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    சித்தார்த்தாவின் மறைவு குறித்து விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சித்தார்த்தாவுடன் எனக்கு நேரடியாக பழக்கம் இல்லாவிட்டாலும் மறைமுக தொடர்புகள் உள்ளன. நல்ல மனிதர், புத்திசாலி தொழிலதிபர்.

    தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதியிருந்த கடிதத்தை பார்த்து மனமுடைந்தேன். அரசு அமைப்புகளும் வங்கிகளும் ஒரு மனிதரை விரக்தியின் நிலைக்கே கொண்டு சேர்த்துவிடும்.

    என்னுடைய விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் வாங்கிய கடனை திரும்பவும் செலுத்துகிறேன் என்று கூறியும் என்னை விடவில்லை என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இவர் இந்திய வங்கிகளில் ரூ 9000 கோடி கடனை பெற்று வெளிநாட்டுக்கு தப்பியோடியவராவார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+