ஸ்குவாக் கோட் என்பது என்ன? ஏர் இந்தியா விமானம் இன்று 7700 எமர்ஜென்சி குறியீடு அனுப்பியது ஏன்?
லண்டன்: இன்று மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம், இங்கிலாந்து நாட்டின் மீது பறந்து கொண்டிருந்த போது திடீரென அதில் இருந்து அவசரகால தொடர்புக்கான "ஸ்குவாக் குறியீடு" வந்துள்ளது. இதனை ஃபிளைட் டிராக்கரான ஃபிளைட் ரேடார் 24 தெரிவித்தது. இந்த ஸ்குவாக் குறியீடு என்பது என்ன? எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
இன்று மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் AIC129 விமானத்தில் இருந்து squawking 7700 என்ற எமர்ஜென்சி சிக்னல் வெளியிடப்பட்டது. இந்த தகவலை ஃப்ளைட் ரேடார் தளம் வெளியிட்டதுமே பரபரப்பு தொற்றிக் கொண்டது. பின்னர், இந்த ஸ்குவாக் குறியீடு எமர்ஜென்சி நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த விமானம் லண்டனில் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது.

ஸ்குவாக் குறியீடு என்பது என்ன?: ஸ்குவாக் குறியீடு என்பது வானில் பறக்கும் விமானங்களை அடையாளம் காண ஏடிசி எனப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் தரும் ஒரு குறியீடு. விமானங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஸ்குவாக் குறியீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக அவசர காலங்களில் விமானத்தை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் இந்த ஸ்குவாக் குறியீடுகள் உதவுகின்றன.
விமானம் கடத்தப்பட்டால்..: ஸ்குவாக் குறியீடுகள் நான்கு இலக்கத்தில், 0000 முதல் 7777 வரை எண்களைக் கொண்டிருக்கும். அவற்றில் சில குறியீடுகள் குறிப்பிட்ட அபாயங்களைக் குறிப்பதாக இருக்கும். உதாரணமாக 7500 என்ற குறியீடு, விமானங்கள் கடத்தப்படும்போது விடுக்கப்படும் எமர்ஜென்சி குறியீடு ஆகும். அதேபோல, 7600 என்ற குறியீடு, விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான வாய்மொழித் தொடர்பை இழந்துவிட்டது என்பதை உணர்த்தும் குறையீடு ஆகும்.
7700 என்பது அவசரகால குறியீடு 7700. இது பொதுவான எமர்ஜென்சி நிலைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த எமர்ஜென்சி குறியீட்டை அனுப்பும்போது, ஏடிசி, உடனடியாக, இந்த விமானத்துக்கு முன்னுரிமை அளித்து என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து உதவும்.
ஸ்குவாக் குறியீடுகள் எப்படி வேலை செய்யும்?: ஒரு விமானம் ATC ரேடார் கவரேஜுக்குள் நுழைந்ததுமே, அதற்கு ஒரு squawk குறியீடு ஒதுக்கப்படும்.. இந்தக் குறியீடு விமானத்தின் டிரான்ஸ்பாண்டரைச் செயல்படுத்துமாறு விமானிக்கு அறிவுறுத்துகிறது, இது விமானத்தின் இருப்பிடம், எந்த உயரத்தில் பறக்கிறது, உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ATC க்கு அனுப்புகிறது. அவசரகாலச் சூழ்நிலைகளில், விமானிகள், கண்ட்ரோல் மையத்துக்கு தங்கள் நிலையை பற்றி எச்சரிக்க குறிப்பிட்ட ஸ்க்வாக் குறியீட்டை அனுப்பும்.
ஸ்குவாக் குறியீடு வந்ததுமே, ஏடிசி கண்ட்ரோல் மையம் உடனடியாக உஷாராகி, விமானத்திற்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா? எதனால் ஸ்குவாக் எமர்ஜென்சி குறியீடு வந்தது, விமானத்தை தொடர்பு கொள்ள முடிகிறதா என ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்.
ஸ்குவாக் 7700: இன்று, மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் AIC129 ஸ்குவாக் குறியீடு 7700 ஐ அனுப்பியது, இது லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை நெருங்கும் போது ஸ்க்வாக் குறியீடு 7700 ஐ அனுப்பியது. இந்த ஸ்குவாக் 7700 குறியீடு பொதுவான அவசரநிலையைக் குறிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications