"பசு பூஜை" தொடங்கி.. அத்தனையும் செய்து பார்த்த ரிஷி சுனக்! ஆனாலும் படுதோல்வி! பரபர காரணங்கள்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என மிகக் கடுமையாக முயன்ற போதிலும், ரிஷி சுனக்கால் வெற்றி பெற முடியவில்லை.
கடந்த 2019இல் பிரிட்டன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டவர் போரிஸ் ஜான்சன். பிரெக்ஸிட் உள்ளிட்ட நடவடிக்கையால் தொடக்கத்தில் அவருக்கு மக்களிடையே ஆதரவு அதிகமாகவே இருந்தது.
இருப்பினும், அதன் பின்னர் சர்ச்சைக்குரிய நியமனங்கள், ஊரடங்கு பார்டி எனத் தொடர்ச்சியாகச் சர்ச்சையில் சிக்கினார் போரிஸ் ஜான்சன். இதனால் வெறு வழியின்றி அவர் கடந்த செப். மாதம் பதவி விலகினார்.

புதிய பிரதமர்
இங்கிலாந்து சட்டப்படி எந்தவொரு நபர் ஆளும் கட்சியின் தலைவராக உள்ளாரோ அவர் தான் நாட்டின் பிரதமராக இருக்க முடியும். இதனால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் வென்று பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 47 வயதான லிஸ் டிரஸ் இந்தத் தேர்தலில் மொத்தம் 81,326 வாக்குகளைப் பெற்றார்.

நல்ல தொடக்கம்
இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என மிகக் கடுமையாக முயன்ற போதிலும், ரிஷி சுனக்கால் வெற்றி பெற முடியவில்லை. அவருக்கு 60,399 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. பிரசாரத்தை ஆரம்பித்த சமயத்தில் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகமாகக் கிடைத்தது. இருப்பினும், நாட்கள் செல்ல செல்ல அவருக்கான மக்கள் செல்வாக்கு சரிந்து கொண்டே சென்றது. இந்த சூழலைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட வெளியுறவுத் துறைச் செயலர் லிஸ் டிரஸ் ரேஸில் முந்திவிட்டார்.

நம்பிக்கையை பெற முடியவில்லை
42 வயதான சுனக், தெற்கு இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் பிறந்தார். இவரது பெற்றோர் யாஷ்வீர், உஷா சுனக் இருவரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள் என்றாலும், அவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆகும். இந்தத் தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என ரிஷி சுனக் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இருப்பினும், அவருக்குக் கட்சிக்குள் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. போரிஸ் ஜான்சன் பதவி விலக அழுத்தம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர் என்பதால், கட்சிக்குள் நம்பிக்கையைப் பெற இவரால் முடியவில்லை.

பசு பூஜை
ஒரு கட்டத்தில் அங்குள்ள இந்துக்களின் வாக்குகளைக் கவரப் பசுவுக்குப் பூஜை கூடச் செய்தார். லண்டனில் பூசாரிகள் சூழ அவர் பசுவுக்குப் பூஜை செய்யும் வீடியோ இணையத்தில் டிரெண்டிங் ஆனது. கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் அவர் லண்டனில் பசுவுக்குப் பூஜை செய்தார். புனித நீரைப் பசு மீது தெளித்து அவரே பூஜைகளைச் செய்தார். இருப்பினும், இது அவருக்குத் தேவையான வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை. அதற்கான சில காரணங்களைப் பார்க்கலாம்.

மனைவி
சுனக்கின் தேர்தல் பிரசாரம் பின்னடைவைச் சந்திக்க அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி செலுத்திய வருமான வரியும் முக்கிய காரணம். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்திக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 0.93% பங்குகள் (794 மில்லியன் டாலர் மதிப்பு) உள்ளது. இது பிரிட்டன் இளவரசியின் சொத்தை விட அதிகம் எனச் செய்திகள் பரவியது. மேலும். இன்ஃபோசிஸ் டிவிடென்ட் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு அவர் வரி செலுத்தவில்லை. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அவர் பல மில்லியன் டாலர் வரி செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாக வெளியான தகவலே அவருக்குப் பெரிய பின்னடைவைக் கொடுத்தது.

வரி குறைப்பு
முக்கிய கொள்கை முடிவுகளில் ஒன்றான வரி குறைப்பிற்கு எதிராகவே ரிஷி சுனக் இருந்தார். அதேநேரம் லிஸ் டிரஸ் வரி குறைப்பு செலவுகளை அதிகரித்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என்று நம்பினார். டிரஸின் இந்த அறிவிப்பைப் பொருளாதார வல்லுநர்கள் ஆதரிக்கவில்லை என்றாலும் கூட கன்சர்வேடிவ் கட்சியில் செல்வாக்கை அதிகரிக்க இது உதவியது. இந்த நேரத்தில் தான் சுனக் தேர்தல் ரேஸில் பின்தங்கத் தொடங்கினார். அதன் பின்னர் வரி குறைப்பு குறித்து சில வாக்குறுதிகளை அவர் அளித்தாலும் அது பெரியளவில் பயன் தரவில்லை.

கிரீன் கார்டு
இப்படி தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்தித்த ரிஷி சுனக்கிற்கு அடுத்து ஒரு பெரிய அடி விழுந்தது. ரிஷி சுனக் சில காலம் அமெரிக்காவில் இருந்தார். அந்தச் சமயம் அவருக்கு கிரீன் கார்டு கிடைத்து இருந்தது. இந்த கிரீன் கார்டை அவர் பிரிட்டன் திரும்பி, எம்பி ஆன பின்னரும் கூட சில காலம் வைத்திருந்ததாக செய்திகள் வெளியானது. இது கன்சர்வேடிவ் கட்சியினர் மத்தியில் ரிஷி சுனக் ஆதரவைப் பாதாளத்திற்குத் தள்ளியது.

உறுதி செய்த சம்பவம்
போதாக்குறைக்கு ரிஷி சுனக்கின் மிடுக்கான வாழ்க்கை முறையும் அவரை தொண்டர்களிடம் இருந்து விலக்கிக் காட்டியது. பிரிட்டனே வெப்பத்தில் திணறிக் கொண்டிருந்த போது. அவர் தனது நீச்சல் குளத்திற்கு 4 லட்சம் பவுன்ட் செலவிட்டது அவரது தோல்வியை உறுதி செய்துவிட்டது என்றே சொல்லலாம். தொடக்கத்தில் சிறப்பான ஆதரவு கிடைத்தும் கூட, அதன் பின்னர் ரிஷி சுனக் எடுத்த தவறான முடிவுகளே அவரது தோல்விக்கு வித்திட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications