ஆபரேஷன் "கோல்டன் ஆர்ப்!" சார்லஸ் முடிசூட்டு விழா..ரெடியாகும் பிரிட்டன்! உலகமே உற்றுநோக்கும் நிகழ்வு
லண்டன்: பிரிட்டன் நாட்டின் புதிய மன்னராக சார்லஸ் பதவியேற்றுள்ள நிலையில், அவரது முடிசூட்டு விழாவுக்குப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பிரிட்டன் வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் ராணி எலிசபெத். இவர் 1952இல் தொடங்கி சுமார் 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்துள்ளார்.
96 வயதான ராணி எலிசபெத் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.

ராணி எலிசபெத்
ஸ்காட்லாந்தில் உள்ள மாளிகையில் அவர் ஓய்வெடுத்து வந்த நிலையில், அங்கேயே அவரது உயிர் பிரிந்தது. சமீபத்தில் தான் அவரது உடல் லண்டனுக்கு எடுத்துவரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் அவருக்கு இறுதிச் சடங்கும் நடைபெற உள்ளது. ஆப்ரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்ற பெயரில் இது நடந்து வருகிறது.

ஆப்ரேஷன் கோல்டன் ஆர்ப்
ராணி எலிசபெத் உயிரிழந்த நிலையில், சார்லஸ் புதிய மன்னரானார். அவர் கடந்த சனிக்கிழமை புதிய மன்னராகப் பதவியேற்ற நிலையில், விரைவில் முடிசூட்டு விழாவும் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. "ஆப்ரேஷன் கோல்டன் ஆர்ப்" என்று பெயரிடப்பட்டுள்ள இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் தான் சார்லஸ் பிரிட்டன் பிரதமராக முடிசூட்டுகிறார்.

எப்போது
அவர் ஏற்கனவே மன்னராகப் பதவியேற்றாலும், அதிகாரப்பூர்வமாக முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. இதுவரை வரை, புதிய மன்னரின் முடிசூட்டு விழாவிற்கான அதிகாரப்பூர்வ தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ராணி எலிசபெத் மறைவுக்கு 10 நாட்கள் அரசு முறை துக்கம் அங்கு அனுசரிக்கப்படும் நிலையில், அதற்குப் பின்னரே இந்த நிகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் இங்கிலாந்தில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்ட உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பே
சார்லஸின் முடிசூட்டு விழா ஆபரேஷன் கோல்டன் ஆர்ப் என்ற பெயரில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் எப்போது என்ன நடக்க வேண்டும் என்ற திட்டம் ராணி எலிசபெத் மறைவுக்கு முன், பல ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது ஆகும். இதை அவர்கள் ரகசியமாக வைத்திருக்கவே திட்டமிட்டு இருந்தனர். இருப்பினும், கடந்த 2016ஆம் ஆண்டு தவறுதலாக இந்த ஆப்ரேஷனின் பெயர் லீக்கானது.

900 ஆண்டு பாரம்பரியம்
இந்த ஆபரேஷன் கோல்டன் ஆர்ப் பற்றிக் கூடுதல் தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னரின் முடிசூட்டு விழா கடந்த 900 ஆண்டுகளாகப் பாரம்பரியமாக நடந்து வருகிறது. அந்த பாரம்பரியம் காக்கும் வகையிலேயே மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நடக்கும்
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடக்கும் முடிசூட்டு விழாவில், கேன்டர்பரியின் பேராயர் மத சேவையை நடத்துவார். அதில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் திருச்சபையின் முன்னிலையில் மன்னர் சத்தியப்பிரமாணம் செய்வார். எட்வர்ட் மன்னரின் நாற்காலியில் சார்லஸ் அமரும் நிலையில், அவருக்கு பேராயர் ஆசீர்வதிப்பார். மேலும் முன்னாள் மன்னர் மறைந்த எட்வர்ட்டிடம் இருந்த கிரீடம் மற்றும் செங்கோல் மன்னர் சார்லஸுக்கு வழங்கப்படும்.

உலக நாடுகள்
உலகமே உற்றுநோக்கும் விழாவாக இந்த நிகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மூன்றாம் சார்லஸ் மன்னரின் மனைவி, ராணி கன்சார்ட் கமிலாவும் இதேபோன்ற விழா நடைபெற உள்ளது. இருப்பினும், மன்னர் முடிசூட்டு விழா அளவுக்கு பெரியதாக இல்லாமல், சிறிய விழாவாகவே இது நடைபெறும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications