Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்டன் தேர்தலில் களமிறங்கிய 8 தமிழர்களின் நிலை என்ன! வென்றவர்கள் எத்தனை பேர்! தோற்றது எத்தனை பேர்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் பலரும் போட்டியிட்டனர். குறிப்பாகத் தமிழர்கள் 8 பேர் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டனர். அவர்களில் எத்தனை பேர் வென்றுள்ளனர்.. எத்தனை பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பிரிட்டன் நாட்டில் மொத்தம் 650 இடங்கள் இருக்கும் நிலையில், அதில் பெரும்பான்மைக்குத் தேவையான 326+ இடங்களில் வென்று தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ஸ்டார்மர் பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

UK Election Results 2024 UK Poll Results 2024 Rishi Sunak

உமா குமரன்: உமா குமரன் தொழிலாளர் கட்சி சார்பில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் வில் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதி தொழிலாளர் கட்சி பலமாக உள்ள தொகுதிகளில் ஒன்று என்பதால் உமா குமரன் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப 44.1% (19,145 வாக்குகள்) வாக்குகளைப் பெற்று உமா குமரன் வென்றுள்ளார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட க்ரீன் வேட்பாளர் 17% வாக்குகளை மட்டுமே பெற்றார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 4ம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

உமா குமரன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கிழக்கு லண்டன் பகுதியில் தான். அதேநேரம் இவரது பெற்றோர் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த போது அவரது பெற்றோர் பிரிட்டன் நாட்டிற்கு வந்துள்ளனர். உமா குமரன் அங்குள்ள தேசிய மருத்துவ சேவைகளில் பணியாற்றியுள்ளார்.

கவின் ஹரன்: கவின் ஹரன் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் சவுத்எண்ட் ஈஸ்ட் மற்றும் ரோச்ஃபோர்ட் தொகுதியில் களமிறங்கினார். இந்த தொகுதியில் கடந்த முறை கன்சர்வேடிவ் கட்சி வென்ற போதிலும் இந்த முறை வெல்ல முடியவில்லை. தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட பேயோ அலபா 38.8% வாக்குகள் (15,395 வாக்குகள்) பெற்று வென்றார். கடும் போட்டி கொடுத்த கவின் ஹரன் 11,368 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

மயூரன் செந்தில்: மயூரன் செந்தில் எப்சம் மற்றும் ஈவெல் தொகுதியில் ரிபார்ம் யுகே என்ற கட்சி சார்பில் போட்டியிட்டார். மருத்துவரான இவர் 10% வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த தொகுதியில் லிபரல் டெமாக்ராட் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், லிபரல் டெமாக்ராட் வேட்பாளர் ஹெலன் மாகுவேர் வெற்றி பெற்றார்.

டெவினா பால்: டெவினா பால் ஹேம்பிள் பள்ளத்தாக்கு தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் டெமாக்ராட் இடையே தான் போட்டி.. தொழிலாளர் கட்சிக்குப் பெரியளவில் வலிமை இல்லை. இருந்த போதிலும் கடும் போட்டி கொடுத்த டெவினா பால் 16.2% வாக்குகளைப் பெற்று 3ம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் பால் ஹோம்ஸ் 36% வாக்குகளைப் பெற்று வென்றார்.

நரணி ருத்ரா ராஜன்: நரணி ருத்ரா ராஜன் ஹேமர்ஸ்மித் மற்றும் சிஸ்விக் தொகுதியில் க்ரீன் கட்சி சார்பில் போட்டியிட்டார்.. இந்தத் தொகுதியில் தொழிலாளர் கட்சிக்கே ஆதரவு அதிகமாகும். சுமார் 52% வாக்குகளைப் பெற்று ஆண்டி ஸ்லாட்டர் வென்றார். நரணி ருத்ரா ராஜன் ஹேமர்ஸ்மித் 9.7% வாக்குகளை மட்டுமே பெற்று 3ம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

கிரிஷ்னி ரேஷகரோன்: சென்னையில் பிறந்த கிரிஷ்னி ரேஷகரோன் தொழிலாளர் கட்சி சார்பில் சட்டன் அண்ட் சீம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் லிபரல் டெமாக்ராட் வேட்பாளர் லூக் டெய்லர் 36.9% வாக்குகளைப் பெற்று வென்றார். கிரிஷ்னி ரேஷகரோன் சுமரர் 17.7% வாக்குகளைப் பெற்று 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

ஜாஹிர் உசேன்: சீர்காழியில் பிறந்த ஜாஹிர் உசேன் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி சார்பில் குரோய்டன் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். தொழிலாளர் கட்சி இந்த தொகுதியில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அக்கட்சி வேட்பாளர் 54.1% வாக்குகளைப் பெற்றார். கன்சர்வேடிவ் மற்றும் க்ரீன் கட்சிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நிலையில், ஜாஹிர் உசேன் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

கமலா குகன்: இவர் ஸ்டாலிபிரிட்ஜ் மற்றும் ஹைட் தொகுதியில் லிபரல் டெமாக்ராட் போட்டியிட்டார்.. தொழிலாளர் கட்சி வலிமையாக உள்ள இந்த தொகுதியில் அக்கட்சியே வென்றது. தொழிலாளர் கட்சியின் ஜொனாதன் ரெனால்ட்ஸ் 43% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். கமலா குகன் சுமார் 1080 வாக்குகளை மட்டுமே பெற்று கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+