போராளி டூ ராஜினாமா! ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்.. லிஸ் டிரஸ் எதிராக திரைமறைவில் நடந்த சம்பவங்கள்
லண்டன்: பிரிட்டன் பிரதமராக இருந்து லிஸ் டிரஸ் திடீரென நேற்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளது அங்குக் குழப்பத்தை அதிகரித்து உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் அடுத்த பிரதமர் யார் என்று கேள்வி எழுந்தது.
அந்நாட்டு சட்டப்படி ஆளுங்கட்சியின் தலைவரே பிரிட்டன் பிரதமராக இருப்பார். அதன்படி ஆளும் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் போட்டி ஏற்பட்டது.

லிஸ் டிரஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு முதலில் ஆதரவு அதிகமாகவே இருந்தது. இருப்பினும், இடையே சில காரணங்களால் அவரது ஆதரவு அப்படியே மெல்லக் குறைந்தது. இதன் காரணமாக அப்போது நடந்த தேர்தலில் லிஸ் டிரஸ் பிரிட்டன் பிரதமர் ஆனார். அவரை கடந்த மாதம் பிரிட்டன் மகாராணி எலிசபெத் பிரிட்டன் பிரதமராக நியமித்தார். ராணி எலிசபெத் நியமித்த கடைசி பிரதமர் இவர் ஆவார்.

பலன் இல்லை
இருப்பினும், இவர் எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பிரிட்டன் பொருளாதாரக்கை காக்க முடியவில்லை. இதனால் இரு அமைச்சர்கள் பதவி விலகினர். மேலும், கட்சிக்கு உள்ளேயும் அழுத்தம் அதிகரித்தது இதையடுத்து வேறு வழியின்றி நேற்று இவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். சரி இதற்கான காரணத்தைப் பார்க்கலாம். உக்ரைன் போர் காரணமாக எரிசக்தி கட்டணங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை லிஸ் டிரஸ் கொண்டு வந்தார். இருப்பினும், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

வரி குறைப்பு
கடந்த செப். மாதம் மினி-பட்ஜெட் ஒன்று அறிவிக்கப்பட்டது. ஆறு மாதங்களில் $ 67 பில்லியன் செலவில் எரிசக்தி திட்டம் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட உடன் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே திடீரென வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பை லிஸ் டிரஸ் வெளியிட்டார். இது அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்குப் பலன் அளிப்பதாக இருந்தது.

பெரிய அடி
மேலும், இந்த திடீர் அறிவிப்பு பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. பிரிட்டன் பவுண்ட் மதிப்பு சர்வதேச சந்தையில் குறையத் தொடங்கியது. இது அரசியல் அரங்கிலும் எதிரொலித்தது. மேலும், சில வரி குறைப்புகளை லிஸ் டிரஸ் அறிவிக்க இருந்த போதிலும், அழுத்தம் அதிகரித்ததால் வேறு வழியின்றி அவர் வருமான வரி குறைப்பு விவகாரத்தில் யூ டர்ன் போட்டார். இது அவருக்கு விழுந்த பெரிய அடியாகும்.

ராஜினாமா
இதையடுத்து சில நாட்கள் இடைவெளியில் இரு அமைச்சர்கள் பதவி விலகினர். இதுவும் அவருக்கு அழுத்தத்தை அதிகரித்தது. இருந்த போதிலும், தான் ஒன்றும் தோல்வியைக் கண்டு ஓடுபவர் இல்லை என்றும் கடைசி வரை களத்தில் நின்று போராடுபவர் என்றும் லிஸ் டிரஸ் கடந்த புதன்கிழமை தான் கூறி இருந்தார். இருப்பினும், அதற்கு மறுநாளே அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

திரைமறைவு சம்பவங்கள்
பிரிட்டன் பொருளாதாரம் மீது அடுத்தடுத்து அடி விழுந்தது. இதனால் லிஸ் டிரஸ் மீது சொந்தக் கட்சியினரே நம்பிக்கை இழந்தனர். மேலும், நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்தும் கூட பரிசீலனை செய்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் தனது பிரதமர் பறிபோகும் என்பதை உணர்ந்தே அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications