அவிழும் "மர்மம்.." கடலுக்கு அடியே புதைந்துள்ள கல்லறை.. அன்று என்ன நடத்து.. வெளியாகும் சீக்ரெட்
லண்டன்: டைட்டானிக் கப்பல் மூழ்கி நூற்றாண்டைக் கடந்தாலும் இன்னுமே அது குறித்துப் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அப்படி வந்த ஒன்று குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்த உலகில் இருக்கும் கடல்களில் இதுவரை எத்தனையோ கப்பல்கள் மூழ்கி இருக்கிறது. ஆனால், எந்தவொரு கப்பலுக்கும் கிடைக்காத கவனமும் புகழும் டைடானிக் கப்பலுக்குக் கிடைத்துள்ளது.

அதிலும் ஜேம்ஸ் கேமரூன் எடுத்த டைடானிக் படம் உலகெங்கும் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக உருவானது மட்டுமின்றி, டைடானிக் புகழையும் அப்படியே வைத்திருக்க உதவியது..
டைட்டானிக்: இது ஒரு பக்கம் இருக்க அங்கே 1912ஆம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக் கப்பல் குறித்து இன்னுமே செய்திகள் வெளியாகியே வருகிறது. இதனிடையே அப்படியொரு சுவாரசிய தகவல் தான் இப்போது வெளியாகி உள்ளது. டைட்டானிக் கப்பல் விபத்தின் முழு அளவிலான 3D ஸ்கேன், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அட்லாண்டிக் கடலில் அந்த கப்பலுக்கு என்ன நடந்தது என்பது குறித்துக் கூடுதல் விவரங்களைத் தரலாம்.
சுமார் 4,000 மீட்டர் (13,100 அடி) ஆழத்தில் இருக்கும் அந்த டைட்டானிக் கப்பலின் சிதைவை இந்த உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் அப்படியே காட்டியிருக்கிறது. 1912 ஏப்ரலில் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலிருந்து நியூயார்க்கிற்குத் தனது முதல் பயணத்தின் போது இந்த சொகுசு கப்பல் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
விபத்திற்குப் பிறகு கப்பலின் சிதைவைப் பலரும் தேடினர். பல ஆண்டு தேடுதலுக்குப் பிறகு, 1985இல் கனடாவின் கடற்கரையிலிருந்து 650 கிலோமீட்டர்கள் தொலைவில் கப்பலின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், அப்போது நம்மிடம் இருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு கேமராக்களால் கப்பலை முழுமையாகப் படம் எடுக்க முடியவில்லை.
3டி இமேஜ்: நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 2022இல் ஆழ்கடல் மேப்பிங் நிறுவனமான மாகெல்லன் லிமிடெட் நிறுவனம் மூலம் கப்பல் சிதைவுகளை 3டி மூலம் உருவாக்கினர். ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள், அட்லாண்டிக் கடலின் அடிப்பகுதியில் உள்ள சிதைவுகளை 200 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து, 7 லட்சத்திற்கும் மேற்பட்ட படங்களை எடுத்தன.
கடலில் இருக்கும் இடிபாடுகளைச் சேதப்படுத்தக் கூடாது என்பதால் அதைத் தொட அனுமதி அளிக்கவில்லை. மேலும், கப்பலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டரையும் அவர்கள் வரைபடமாக எடுத்துள்ளனர். அனைத்தையும் பொறுமையாக ஸ்கேன் செய்து இப்படி ஒரு இமேஜை உருவாக்கியுள்ளனர்.
சிறு சிறு விவரங்கள்: இந்த 3டி படம் தான் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிதைந்து போய் இருக்கும் கப்பல் குப்பைகளால் சூழப்பட்டுள்ளது. சிதைந்துள்ள கப்பலின் சிறு சிறு விவரங்களைக் கூட அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கப்பல் தொடர்ந்து சிதைந்து வருவதால் வரும் காலத்திலும் கூட கப்பலுக்கு என்ன நடந்தது என்ற மர்மத்தை ஆய்வு செய்ய விரும்புவோருக்கு இது பெரியளவில் உதவவே போகிறது. இந்த 3டி இமேஜ் மூலம் டைட்டானிக் கப்பல் இப்போது எப்படி இருக்கிறது என்பதை நம்மால் நேரடியாகப் பார்க்க முடிகிறது.
இதை ஆய்வு செய்ய பல்வேறு ஆய்வாளர்களும் ஆர்வமாக இருப்பதாகவும் இதன் மூலம் டைட்டானிக் குறித்துப் பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications