Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேஷன் "கோல்டன் ஆர்ப்!" உலகமே எதிர்பார்க்கும் சார்லஸ் முடிசூட்டு விழா! ஜோராக ரெடியாகும் பிரிட்டன்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் புதிய மன்னராக சார்லஸ் அடுத்த மாதம் முடிசூட்டப்பட உள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விழா குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

பிரிட்டனில் நீண்ட காலம் தலைமை பொறுப்பில் இரண்டாம் ராணி எலிசபெத் தனது 96 வயதில் கடந்தாண்டு செப். 8ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் நாட்டின் மன்னர் பதவிக்கு வந்தார்.

ராணி எலிசபெத் சில காலம் உடல்நலக் குறைவாக இருந்த நிலையில், அப்போதே சார்லஸ் தான் அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார். இந்தச் சூழலில் தான் ராணி எலிசபெத் மரணத்தைத் தொடர்ந்து அவர் மன்னர் பொறுப்பிற்கு வந்தார்.

 What will happen King Charles IIIs coronation on May 6

மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா இன்னும் நடைபெறவில்லை. அவரது முடிசூட்டு விழா வரும் மே 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அன்றைய தினம் பிரிட்டனில் ஏற்கனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சார்லஸ் முடிசூட்டு விழாவுக்குப் பிரிட்டனே தயாராகி வருகிறது. இதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், 70 ஆண்டுகளில் முதல்முறையாக முடிசூட்டு விழா நடைபெறுகிறது. இதனால் அங்கே மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது.

கோல்டன் ஆர்ப்: இந்த முடிசூட்டு விழா "ஆப்ரேஷன் கோல்டன் ஆர்ப்" என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் மன்னரின் முடிசூட்டு விழா பாரம்பரியமாக நடைபெறும். மன்னர் இறப்பிற்குப் பிறகு பல மாதங்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதன் பின்னரே பல மாத தீவிர தயாரிப்பிற்குப் பின்னரே முடிசூட்டு விழா நடைபெறும் அப்போது, நாடு முழுவதும் பாரம்பரிய விழா மற்றும் அரச ஊர்வலங்கள் நடைபெறும். 900 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மே 6ஆம் தேதி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சார்லஸுக்கு முடிசூட்டுதலுடன் இந்த மூன்று நாட்கள் நிகழ்வு தொடங்கும்.

பல நட்சத்திரங்கள் பங்கேற்கும் இசைக் கச்சேரி மே 7ஆம் தேதி நடைபெறும். லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டை இவை நடக்கும். யாரெல்லாம் இதில் கலந்து கொள்வார்கள் என்பது இன்னும் தவிக்கப்படவில்லை. இதில் பல புகழ்பெற்ற நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்றே தெரிகிறது. அதேபோல அன்றைய தினம் மதியம் மிக பெரிய விருந்துகளும் நாடு முழுக்க நடத்தப்படும். முடிசூட்டு விழாவில் கடைசி நாளன்று பிக் ஹெல்ப் அவுட் என்ற நிகழ்வு நடத்தப்படும். அன்றைய தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றாக இணைந்து நாட்டின் வளர்ச்சியாகப் பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.

சிம்பிளாக நடக்கும்: பிரிட்டன் இப்போது இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், முடிசூட்டு விழா 1953இல் எலிசபெத்துக்காக நடத்தப்பட்டதை விட மிக சிம்பிளாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணி எலிசபெத்திற்கு நடந்த முடிசூட்டு விழா நிகழ்வு சுமார் 3 மணி நேரம் நீடித்தது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 8,251 அதிகாரப்பூர்வ விருந்தினர்கள் இருந்தனர். 129 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஆனால், இந்த முறை வெறும் 2,000 விருந்தினர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்துள்ளனர். முடிசூட்டு விழா ஒரு மணி நேரம் நீடிக்கும்.

 What will happen King Charles IIIs coronation on May 6

உலகின் பல்வேறு அரசு குடும்பங்களுக்கும் இந்த நிகழ்வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் மற்றும் ஜப்பானின் இளவரசர் புமிஹிட்டோ மற்றும் அவரது மனைவி கிகோ இதில் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட பல ஐரோப்பியத் தலைவர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். மேற்குல நாடுகளுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தாலும் கூட சீனாவின் உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஹாரி மேகன்: அமெரிக்கா அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடன் அமெரிக்கா சார்பில் கலந்து கொள்ள உள்ளார். சமீபத்தில் தான் அதிபர் ஜோ பைடன் முடிசூட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் மன்னரைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல சிறந்து விளங்கிய சில பிரிட்டன் குடிமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அமெரிக்காவில் வசித்து வரும் இளவரசர் ஹாரியும் மேகனும் இதில் கலந்து கொள்வார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. சார்லஸின் மனைவி கமிலாவும் ராணி மேரியின் கிரீடத்தை அணிந்து முறைப்படி முடிசூட்டப்படுவார். நூற்றாண்டு பழமையான இந்த கிரீடத்தை அணிந்து தான் கிங் ஜார்ஜ் V உடன் 1911ஆம் ஆண்டு முடிசூட்டு விழாவிற்காக ராணி மேரி முடி சூட்டிக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+