உடலுறவு.. டீச்சரின் குமட்டும் ஆபாசம்.. பாத்ரூமைகூட விடல.. பரிதாப 16 வயதினிலே.. கோர்ட் அதிரடி.. சபாஷ்
லண்டன்: 16 வயது பெண்ணுக்கு, மனநிலையே பாதிக்கப்படும் சூழல் வந்துவிட்டது. இதற்கு காரணமான டீச்சருக்கு சரியான தண்டனையை கோர்ட் தந்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டிலிருந்தே இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த பள்ளி மாணவிக்கு 16 வயதுதான் ஆகிறது. இவரிடம் தன்னுடைய பாலியல் வக்கிரத்தை அரங்கேற்றியிருக்கிறார் அதே பள்ளியின் ஆசிரியை எரின் ஹெப்ல்வைட்.. இந்த டீச்சருக்கு 32 வயதாகிறது.

16 வயது : 16 வயது மாணவியை தன்னுடைய பாலியல் தேவைக்காக டீச்சர் தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இது ஆரம்பத்திலேயே, அந்த பள்ளியில் உள்ளவர்களுக்கே தெரியவந்துள்ளது.. இறுதியில் பள்ளி நிர்வாகம்வரை விஷயம் போயிருக்கிறது.. எனவே, பள்ளி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட டீச்சரை அழைத்து, வார்னிங் தந்தது.. மற்றொருபக்கம் சிறுமியின் வீட்டிற்கும் தகவல் தந்து அலர்ட் செய்தது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், உடனடியாக தங்கள் மகளின் செல்போனை வாங்கி செக் செய்திருக்கிறார்கள்.. அப்போது, ஏராளமான ஆபாசமாக மெசேஜ்களை மாணவிக்கு, டீச்சர் அனுப்பியிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்கள்.
மெசேஜ்: உடனே இந்த மெசேஜ் ஆதாரங்களுடன் போலீசுக்கு ஓடினார்கள். சம்பந்தப்பட்ட டீச்சர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் தந்தனர். போலீசாரும், இதன்பேரில் வழக்கு பதிவு செய்து, விசாரணையை ஆரம்பித்தது.
அப்போதுதான் டீச்சரின் காம லீலைகளை பார்த்து, போலீசாருக்கே தூக்கி வாரிப்போட்டுள்ளது. காதலர் தினத்தன்று, மாணவியை பள்ளியில் உள்ள பாத்ரூமுக்கு அழைத்து சென்று, தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று டீச்சர் கட்டாயப்படுத்தினாராம். பல நேரங்களில் மாணவியின் அனுமதியின்றி முத்தம் தந்துவிடுவாராம்.
மன உளைச்சல்: டீச்சரின் இந்த விபரீதங்களை பார்த்து, அந்த மாணவியின் மனநிலை கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது.. நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி வந்திருக்கிறார்.. மாணவியால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை.. இனிமேல் ஸ்கூலுக்கு போகக்கூடாது, பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடலாம் என்றுகூட அந்த சிறுமி முடிவெடுத்துள்ளார்.
டீச்சரின் வீட்டிற்குள் போலீசார் நுழைந்தபோது, அதற்குமேல் அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டனர். காரணம், டீச்சரின் வீடு முழுக்க போட்டோக்கள் இருந்துள்ளன.. அந்த மாணவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட 400 போட்டோக்களை சுவர்களில் ஒட்டிவைத்திருந்தாராம்.. அதில் சில போட்டோக்களில் டீச்சரும், மாணவியும் நிர்வாணமாக இருந்திருக்கிறார்கள்..
போட்டோக்கள்: இறுதியில், இந்த அனைத்து ஆதாரங்களையும் திரட்டிக்கொண்டு, போலீசார் கோர்ட்டுக்கு போனார்கள்.. டீச்சரையும் கோர்ட்டில் கொண்டுபோய் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அனைத்து ஆதாரங்களையும் கண்டு கடும் ஆவேசமானார்.. தன்னுடைய சுயநலம், முட்டாள்தனத்தால், நம்பிக்கைக்குரிய தொழிலை களங்கப்படுத்திவிட்டார் என்று டீச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு: இதனிடையே, சம்பந்தப்பட்ட 17 வயது சிறுமி மட்டுமல்லாமல், மேலும் 3 சிறுமிகளுக்கும் டீச்சர் இதுபோலவே பாலியல் தொல்லை தந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவிகளும் பாலியல் குற்றச்சாட்டை டீச்சர் மீது வைத்திருப்பதால், ஆசிரியர் தொழில் ஈடுபடுவதற்கு டீச்சருக்கு வாழ்நாள் தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார். இதைத்தவிர, 2 வருட ஜெயில் தண்டனையும் டீச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு உடலுறவுக்கு அழுத்தம் கொடுத்ததாக டீச்சருக்கு ஏற்கனவே 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி: டீச்சரின் இந்த சம்பவம் ஒட்டுமொத்த இங்கிலாந்திலும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. பள்ளிகளில் கூடுதல் கவனத்தை செலுத்தி, மாணவ - மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பிரிட்டன் பெற்றோர்கள் கோரிக்கையை விடுக்க துவங்கி உள்ளனர்.
தன் கேவலமான செயலால், மதிப்பிற்குரிய வேலையை இழந்து, பொதுவெளியில் அசிங்கப்பட்டு, 32 வயதிலேயே ஜெயிலுக்கும் போய்விட்டார் டீச்சர்... !!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications