Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கோஹினூர் கிரீடமா.. அது வேண்டாமே.." முடிசூட்டு விழாவுக்கு ராணி கமீலா எடுத்த முடிவு.. என்ன காரணம்

ராணி கமீலா கோஹினூர் வைரம் கொண்ட கிரீடத்தை அணிய மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூட்டும் விழாவில் ராணி கமீலா கோஹினூர் வைரம் கொண்ட கிரீடத்தை அணிவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அவர் கோஹினூர் வைரம் கொண்ட கிரீடத்தை அணிய மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை பார்க்கலாம்.

பிரிட்டன் மகாராணியாக இருந்த ராணி எலிசபெத் கடந்தாண்டு உயிரிழந்தார். பிரிட்டனில் நீண்ட காலம் தலைமை பொறுப்பில் இரண்டாம் ராணி எலிசபெத் தனது 96 வயதில் கடந்தாண்டு செப். 8ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் நாட்டின் மன்னர் பதவிக்கு வந்தார். ராணி எலிசபெத் சில காலம் உடல்நல குறைவாக இருந்த நிலையில், அப்போதே சார்லஸ் தான் அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார்.

 மன்னர் சார்லஸ்

மன்னர் சார்லஸ்

இதற்கிடையே மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா இன்னும் நடைபெறவில்லை. அவரது முடிசூட்டு விழா வரும் மே 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஏற்கனவே பிரிட்டனில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சார்லஸ் முடிசூட்டு விழாவுக்குப் பிரிட்டனே தயாராகி வருகிறது. இந்த முறை முடிசூட்டு விழா சிம்பிளாகவே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. பிரிட்டன் பொருளாதாரம் மோசமாக உள்ள நிலையில், அங்கு மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் சார்லஸ் தனது முடிசூட்டு விழாவை சிம்பிளாக நடந்த முடிவு செய்துள்ளார்.

 கோஹினூர் கிரீடம்

கோஹினூர் கிரீடம்

மன்னரின் முடிசூட்டு விழாவில் ராணி அணியும் கிரீடமும் பலதரத்தைக் கவனத்தை ஈர்க்கும். இந்த முடிசூட்டும் விழாவில் ராணி கமீலா கோஹினூர் வைரம் கொண்ட கிரீடத்தை அணிவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், இந்தாண்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடக்கும் சார்லஸ் முடிசூட்டு விழாவில் சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரத்தை சார்லஸ் மன்னரின் மனைவி ராணி கமீலா அணிய மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக ராணி மேரி கிரீடத்தை அவர் அணிவார் என்று தெரிகிறது.

 பிரிட்டன் வசம் சென்றது எப்படி

பிரிட்டன் வசம் சென்றது எப்படி

உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க வைரங்களில் ஒன்றாக கோஹினூர் வைரம் பார்க்கப்படுகிறது.. இந்தியாவில் இருந்த இந்த வைரம் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் வசம் சென்றது.. 1849ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணிக்கு 11 வயதே ஆன சீக்கிய அரசர் மகாராஜா துலீப் சிங் இந்த கிரீடத்தைப் பரிசாக அளித்தாக கூறப்படுகிறது. இருப்பினும், அப்போது துலீப் சிங்கின் தாயார் பிரிட்டனின் கைதியாக இருந்தார். இதனால் வேறு வழியில்லாமல் தான் மகாராஜா துலீப் சிங் இந்த கிரீடத்தை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

 அதிகரிக்கும் கோரிக்கை

அதிகரிக்கும் கோரிக்கை

இருப்பினும், அப்போது இருந்தே இந்த கிரீடம் பிரிட்டனின் அரச குடும்பத்தின் சொத்தாக இருந்து வருகிறது.. 105 கேரட் வைரத்தைக் கொண்ட இந்த கிரீடத்தின் இன்றைய மதிப்பு 200 மில்லியன் டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1652 கோடியாகும். இந்த சர்ச்சைக்குரிய விலைமதிப்புமிக்க கிரீடத்தைத் தான் ராணி முடிசூட்டு விழாவில் அணிவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவுக்குச் சொந்தமான இந்த கிரீடத்தைப் பிரிட்டன் திருப்பி தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தும் நிலையில், அந்த கிரீடத்தை அணிய வேண்டாம் என்று ராணி கமீலா முடிவு செய்துள்ளார்.

 முடிவு ஏன்

முடிவு ஏன்

அதற்குப் பதிலாக கிட்டதட்ட அதைப் போலவே இருக்கும் ராணி மேரியின் கிரீடத்தை அணிய ராணி கமீலா முடிவு செய்துள்ளார். இது குறித்து சில காலமாகவே தகவல் வெளியாகி வந்த நிலையில், இப்போது இது உறுதியாகியுள்ளது. கமீலாவுக்கு ஏற்றபடி மாற்ற லண்டன் டவரில் இருந்து ராணி மேரி கிரீடத்தை எடுத்துள்ளனர். சமீப காலத்தில் முடிசூட்டு விழாக்களில் பொதுவாக ராணிகளுக்கு புதிய கிரீடமே வடிவமைக்கப்படும் ஆனால், தேவையற்ற ஆடம்பர செலவுகளைக் குறைக்கும் வகையில் ராணி மேரியின் கிரீடத்தை அணிய கமீலா முடிவு செய்துள்ளார்.

 ராணி மேரி

ராணி மேரி

அதேபோல சமீப கால வரலாற்றில் ராணி மேரியின் கிரீடத்தை அணியும் முதல் நபராக கமீலா உருவெடுத்துள்ளார். பருவநிலை மாற்றத்தில் அதிகம் அக்கறை கொண்டுள்ள சார்லஸ் முடிசூட்டும் விழாவில் வேறு என்ன மாற்றங்கள் எல்லாம் இருக்கும் என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். இப்போது கமீலா அணியும் ராணி மேரியின் கிரீடமும் ஒன்றும் லேசுபட்டது இல்லை. லண்டனின் மேஃபேரில் உள்ள பிரபல நகை நிறுவனமான கர்ரார்டாஸ் இந்த கிரீடத்தைச் செய்தனர்.

 முடிசூட்டு விழா

முடிசூட்டு விழா

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழாவில், அவரது மனைவியான ராணி மேரி இந்த கிரீடத்தை அணிந்திருந்தார். 1902ஆம் ஆண்டின் ராணி அலெக்ஸாண்ட்ரா அணிந்த கிரீடத்தால் அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டது.. ராணி மேரி தனது மகன் 6 கிங் ஜார்ஜின் முடிசூட்டு விழாவிலும் இதையே அணிந்திருந்தார். இதன் முகப்பும் கோஹினூர் கிரீடத்தைப் போலவே இருக்கும். சர்ச்சையைத் தவிர்க்க அந்த முகப்பை மாற்றுவார்களா இல்லை அதேபோல விட்டுவிடுவார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+