லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விம்பிள்டன் அட்மின் விஜய் ரசிகரா? ரோஜர் பெடரருக்கு “வாத்தி கம்மிங்” என மாஸ் வெல்கம்!

Google Oneindia Tamil News

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்ற டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் படத்தை விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து "வாத்தி கம்மிங்" என பதிவிட்டு மாஸ் வரவேற்பை அளித்திருக்கின்றனர்.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் முதன்மையானதாக கருதப்படும் விம்பிள்டன் தொடர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு இந்த தொடரில் காலிறுதி வரை முன்னேறி பெடரர் இந்த ஆண்டு காயம் காரணமாக முதல்முறையாக விளையாடாமல் உள்ளார்.

நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன? நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?

வாத்தி கம்மிங் வரவேற்பு

வாத்தி கம்மிங் வரவேற்பு

இந்த நிலையில் விம்பிள்டனின் 100 வது ஆண்டை அனுசரிக்கும் விதமாக சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக உலகளவில் அதிக டென்னிஸ் ரசிகர்களை கொண்ட சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜாம்பவான் ரோஜர் பெடரர் வருகை தந்தார். கோட் ஷூட் அணிந்து ஸ்டைலாக நடந்து வரும் அவரது புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்த விம்பிள்டன், "வாத்தி கம்மிங்" என்று குறிப்பிட்டு வரவேற்று இருக்கிறது.

மாஸ்டர் பட பாடல்

மாஸ்டர் பட பாடல்

கடந்த 2021 ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற மாஸ்டர் திரைப்படத்தில் அனிருத் இசையமைத்த வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்த பாடல் வரிகளை கானா பாலச்சந்தர் எழுதி பாட, அவருடன் அனிருத்தும் சேர்ந்து பாடி அசத்தி இருப்பார். இதனை விஜய் ரசிகர்கள், தமிழர்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் என பலரும் கொண்டாடி தீர்த்தனர்.

வார்னரின் வாத்தி கம்மிங்

வார்னரின் வாத்தி கம்மிங்

பேஸ்புக் ரீஸ்ல், யூடியூப் ஷார்ட்ஸ் என பலவற்றிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் வீடியோக்களை அள்ளித் தெளித்தனர். தமிழ் கடந்து பிற மொழி நடிகர், நடிகைகளும் வாத்தி கம்மிங் பாடலின் வித்தியாசமான நடனத்தை ஆடிக்காட்டி வீடியோக்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளிக் குவித்தனர். குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரும் டெல்லி கேப்பிடஸ் அணியின் வீரருமான டேவிட் வார்னர் விஜய் போன்றே வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ அதிரி புதிரி டிரெண்டானது.

37 கோடி பார்வையாளர்கள்

37 கோடி பார்வையாளர்கள்

டேவிட் வார்னர் வெளியிட்ட வீடியோவால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் தொடங்கி உலக கிரிக்கெட் ரசிகர்கள் வரை பலரது விருப்ப பாடலாகவே மாறியது வாத்தி கம்மிங். இதுவரை யூடியூபில் மட்டும் இந்த பாடலை 37 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். 3.3 கோடி லைக்குகளை பெற்றுள்ள இந்த பாடல் தற்போது விம்பிள்டனிலும் இடம்பிடித்துவிட்டதால் இன்னும் பல சாதனைகளை தகர்க்கும் என்று விஜய் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

English summary
Wimbledon twitter welcomes Roger Federer by giving Vaathi coming caption: : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்ற டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் படத்தை விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து ”வாத்தி கம்மிங்” என பதிவிட்டு மாஸ் வரவேற்பை அளித்திருக்கின்றனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X