வெடிக்கும் 3வது உலகப்போர்? சுரங்கங்களுடன் சைலன்ட்டாக தயாராகும் ஐரோப்பா!. மிரட்டப்போகும் ரஷ்யா?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் தான் விரைவில் ரஷ்யா - ஐரோப்பிய நாடுகள் இடையே 3ம் உலகப்போர் வெடிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு ரஷ்யாவை சமாளிக்க பிரான்ஸ் உள்பட பிற ஐரோப்பிய நாடுகள் அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிக்கும் சுரங்கம் அமைப்பதோடு.. போர் சூழலில் உயிர் வாழ்வது எப்படி என்பது தொடர்பான கையேடுகளை மக்களுக்கு விநியோகிக்க தொடங்கி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போரை தொடங்கியது. இந்த போர் 3 ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது. இப்போது தான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக வருகிறது. உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பொருளாதார தடைகளை விதித்தார். அதேபோல் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது.

russia europe

ஆனால் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் நிலைமை மாறிவிட்டது. டொனால்ட் டிரம்ப் ரஷ்யா உடனான பகையை மறந்து உக்ரைன் போரை நிறுத்த விளாடிமிர் புதினுடன் பேசி வருகிறார். இப்படி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதேவேளையில் உக்ரைனுடனும் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது தலைமையிலான அதிகாரிகள் பேசி வருகின்றனர். இதனால் விரைவில் இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விரைவில் ரஷ்யா - ஐரோப்பிய நாடுகள் இடையே போர் வெடிக்கலாம். இது 3ம் உலகப்போராக மாறலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை விடுத்தது யார் என்றால் ஐரோப்பிய ஆணையம் (European Commission). இந்த ஆணையம் சார்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கிய தகவல் பாஸ் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, ‛‛உக்ரைன் உடனான போரில் ரஷ்யா வென்றால் அது ஐரோப்பிய நாடுகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஐரோப்பிய நாடுகள் தான். நேட்டோ படையில் அதிகம் உள்ளது. உக்ரைன் மீதான போருக்கு நேட்டோவில் அந்த நாடு இணைய விரும்பியது தான் முக்கிய காரணம்.

இதனால் உக்ரைன் போரில் ரஷ்யா வெல்லும்பட்சத்தில் விளாடிமிர் புதினின் பார்வை ஐரோப்பிய நாடுகள் மீது திரும்பும். ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் மீது 2030ம் ஆண்டுக்குள் போரை தொடங்கலாம். இந்த போரின் முக்கிய நோக்கம் என்பது முந்தைய ரஷ்ய பேரரசை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இருக்கலாம். குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா குறிவைக்கலாம்'' என்று எச்சரிக்கை செய்துள்ளது. இதனை ஐரோப்பிய யூனியனாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய பேரரசு என்பது பரந்த நாடாக இருந்தது. இது கடந்த 1917 ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. அந்த ஆண்டில் இருந்து ரஷ்ய பேரரசின் ஒருபகுதியாக இருந்த நாடுகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டன. அதன்படி பெலராஸ், லடிவா, லிதுவேனியா, எஸ்டோனியா, பின்லாந்து, போலந்து, மால்டோவா, அர்மேனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், மற்றும் அமெரிக்காவின் அலஸ்காவின் ஒரு பகுதி உள்ளிட்டவை ரஷ்யா பேரரசாக இருந்தது. இவை தற்போது தனித்தனி நாடுகளாக செயல்பட்டு வருகின்றன. அதோடு பெரும்பாலானவை ஐரோப்பா கண்டத்தில் உள்ளன. இதனால் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பழமை வாய்ந்த ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமாக உள்ளன. அதோடு நேட்டோவில் உறுப்பு நாடுகளாகவும் இருக்கின்றன.

இதன்மூலம் நிச்சயம் விளாடிமிர் புதினால் ஐரோப்பிய நாடுகளுக்கு சிக்கல் வரும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலம் இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது ரஷ்யா - ஐரோப்பா இடையே மோதல் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. போருக்கு நடுவே உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவுவதை ரஷ்யா விரும்பவில்லை. இதனால் உக்ரைன் போரை முடித்துவிட்டு ஐரோப்பாவை புதின் குறிவைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகள் 3ம் உலகப்போர் அச்சத்தில் உள்ளன. அதோடு அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை சைலன்ட்டாக தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி போர் சமயத்தில் தற்காத்து கொள்வது குறித்த கையேடுகளை பிரான்ஸ் தனது மக்களுக்கு வழங்கி உள்ளது. அந்த கையேடு மொத்தம் 20 பக்கங்களை கொண்டுள்ளது. அதில் தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்வது, உயிர்காக்கும் கிட்டில் இருக்கும் 6 லிட்டர் தண்ணீர், உணவு பொட்டலம், பேட்டரி, தேவையான மருந்துகள் மூலம் உயிர் பிழைத்து கொள்வது எப்படி? என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் சில நாடுகள் அணு ஆயுத தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளும் சுரங்கத்தை ஏற்படுத்தும் பணியை தொடங்கி உள்ளன.

அதுமட்டுமின்றி ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் ஷீல்ட்டை ஏற்படுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. . இந்த ட்ரோன் ஷீல்ட் என்பது பால்டிக் கடல் முதல் கருங்கடல் வரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவின் கடல்வழி தாக்குதலை தடுக்க முடியும். அதோடு விளாடிமிர் புதின் போரை தொடங்கினால் அதன்மூலம் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கலாம் என்று ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன.

இதுதவிர ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கும், ரஷ்யாவை எதிர்கொள்ளும் வகையில் படைகளை கட்டமைக்க ஐரோப்பிய யூனியன் சார்பில் 800 பில்லியன் யூரோ (அமெரிக்கா டாலர் என்றால் 500 பில்லியன்) வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இல்லை. இதனால் ஐரோப்பிய யூனியனில் இணையும்படி ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு கோரிக்கை வைத்துள்ளன. ஏனென்றால் ரஷ்யா, பிரான்ஸை போல் பிரிட்டனிடம் அணு ஆயுதம் உள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளிடம் அணு ஆயுதம் இல்லை. இதனால் பிரிட்டனை ஐரோப்பிய யூனியனில் சேர்க்க முயற்சி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இப்படி முழுவீச்சில் ஐரோப்பிய நாடுகள் சைலன்ட்டாக வேலை செய்து வருகின்றன. இதனால் விரைவில் ரஷ்யாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான மோதல் என்பது 3ம் உலகப்போராக வெடிக்கிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+