111 வயதை கடந்து வாழ்வது எப்படி? டயட்டா? ‘சீக்ரெட்’ சொன்ன உலகின் மிக வயதான ஆண்!
லண்டன்: உலகின் மிக வயதான ஆணாகக் கருதப்படும் 111 வயதான பிரிட்டனைச் சேர்ந்த ஜான் ஆல்ஃபிரெட் டின்னிஸ்வுட், தனது நீண்ட ஆயுட்காலம் "வெறும் அதிர்ஷ்டம்" என்றும் தனது உணவில் ஸ்பெஷல் ரகசியம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் அண்மையில் காலமானார். அவர் காலமானதை அடுத்து, உலகில் தற்போது வாழ்ந்து வருபவர்களில் மிக வயதான ஆண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த ஜான் டின்னிஸ்வுட்.

ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா மறைவைத் தொடர்ந்து, உலகின் மிக வயதான ஆண் என்ற அங்கீகாரத்தை ஜான் டின்னிஸ்வுட்டுக்கு வழங்கியது கின்னஸ் உலக சாதனை புத்தகம். ஜான் டின்னிஸ்வுட் 1912 ஆம் ஆண்டில் வடக்கு இங்கிலாந்தின் மெர்சிசைடில் பிறந்தார். டின்னிஸ்வுட் கணக்காளராகவும், தபால் சேவை ஊழியராகவும் பணியாற்றியவர்.
டின்னிஸ்வுட் பணியில் இருந்து ஓய்வு பெற்றே அரை நூற்றாண்டைக் கடந்துவிட்டது. தற்போது டினிஸ்வுட்டின் வயது 111 ஆண்டுகள் மற்றும் 222 நாட்கள். உலகில் நூறு வயதைக் கடந்தவர்களைப் பதிவு செய்து வரும் ஜெரண்டாலஜி ஆராய்ச்சி குழு கின்னஸ் அமைப்பின் சார்பாக டின்னிஸ்வுட்டின் வயதை மதிப்பிட்டு அவரது கின்னஸ் உலக சாதனையை உறுதி செய்துள்ளது.
டின்னிஸ்வுட்டின் நீண்ட ஆயுளுக்கான ரகசியம் பற்றிக் கேட்கப்பட்டபோது, அவர் சொன்ன பதில், அனைவரையும் அசர வைத்தது. "நீண்ட காலம் வாழ்வதற்கு எனது உணவில் எதும் ஸ்பெஷல் ரகசியம் எல்லாம் இல்லை. நான் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் எனக்குப் பிடித்த உணவான மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிடுகிறேன்.
நீங்கள் நீண்ட காலம் வாழ்கிறீர்களா அல்லது குறைந்த காலம் மட்டும் வாழ்கிறீர்ககளா என்பதை நீங்கள் தீர்மானிக்கும் வாய்ப்பு அதிகம் இல்லை, எல்லாம் ஜஸ்ட் அதிர்ஷ்டம் தான்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியுள்ள உலகின் வயதான இந்த தாத்தா, "உலகம், அதன் வழியில், எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இது ஒரு வகையான தொடர்ச்சியான அனுபவம். இது கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வருகிறது, ஆனால் இன்னும் அதிகமாக மாறிவிடவில்லை. சரியான வழியில்தான் செல்கிறது என நினைக்கிறேன்" என தத்துவார்த்தமாகக் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications