தேர்தல் வெற்றியை தொடர்ந்து அசுர வேகத்தில் களமிறங்கும் உ.பி அரசு! பள்ளி கல்வி மீது புஃல் ஃபோக்கஸ்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 1,753 பள்ளிகளை தரம் உயர்த்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இம்மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்ற நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று 6 வருடங்கள் ஆகிறது. இதனை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. காரணம் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியில் இருந்தது கிடையாது. அந்த வகையில் யோகி புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

மறுபுறம் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் யோகி தலைமையில் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி யோகியின் செல்வாக்கை மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் யோகி ஆதித்யநாத் தீவிரம் காட்டி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "இதற்கு முன்னர் இருந்த அரசு மாஃபியாக்களை வளர்த்து அதன் மூலம் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. ஆனால், தற்போதைய பாஜக அரசு மக்களுக்காக பணியாற்றுகிறது. அதனால்தான் முதலீட்டாளர்களை நமது மாநிலத்திற்கு யோகி கொண்டு வந்திருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஏனெனில் வழக்கமாக இந்த மாநாடு மும்பை அல்லது டெல்லியில்தான் நடக்கும். ஆனால் லக்னோவில் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது. இதற்கு யோகிதான் காரணம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்ய முடியாததை தற்போதைய ஆட்சியில் நிகழ்த்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மறுபுறம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மட்டுமல்லாது இதுவரை இல்லாத அளவுக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தொடக்க கல்வி குறித்து புதிய அறிவிப்பை யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 'நிபுன்' அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் இந்த உத்தரவு. 'நிபுன்' அந்தஸ்து என்றால், 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு முழுமையாக வழங்கியிருக்க வேண்டும் என்பதைதான் நிபுன் அந்தஸ்து என்று சொல்லப்படுகிறது.
அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 75 நிபு தொகுதிகள் உருவாக்கப்படும். இந்த தொகுதிக்குள் 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் அடங்கும். இதன் மூலம் எதிர்வரும் 2026-2027ம் ஆண்டிற்குள் அனைத்து மாணவர்களுக்கும் 3 வகுப்பில் முழுமையான எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றிருப்பார்கள். இதற்கு சமக்ரா ஷிக்ஷாவின் மத்திய நிதியுதவி பயன்படுத்தப்படும். இதற்கான ஆசிரியர்கள் முழுவீச்சில் களத்தில் இறக்கப்படுவார்கள். ஆசிரியர்களின் முயற்சியும், மாணவர்களின் ஒத்துழைப்பும் சேரும் போது இந்த திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறும். அதேபோல PM SHRI திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 1,753 பள்ளிகள் மேம்படுத்தப்படும்" என்று கூறியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications