13 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. கண்களை தோண்டி, நாக்கை அறுத்த கொடூரம்.. தந்தை கண்ணீர்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் லக்கிபூரில் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த சிறுமியின் கண்கள் தோண்டப்பட்டு, நாக்கு துண்டிக்கப்பட்டு கொடூர கொலை செய்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கரும்பு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின்படி உடலை மீட்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்தது.

பெற்றோர்
இதுகுறித்து விசாரணையில் அந்த சிறுமி வெள்ளிக்கிழமை மதியம் முதல் காணாமல் போய்விட்டார். அவரை பெற்றோர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அவரது உடல் கரும்பு காட்டில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கரும்பு காடு
அந்த சிறுமியின் சடலம் கிடைக்கப் பெற்ற கரும்பு காடு கைதான இருவரில் ஒருவருக்கு சொந்தமானது. இவர்கள் இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வன்கொடுமை, கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த கொடூர சம்பவத்தால் நாடே அதிர்ச்சிக்குள்ளாகியது.

லக்னோ
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், எனது மகளின் கழுத்தை அவர் அணிந்திருந்த துப்பட்டாவை கொண்டு நெரித்துள்ளார்கள். அவரது கண்களை தோண்டி, நாக்கை அறுத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் லக்னோவிலிருந்து 130 கிமீ தூரத்திற்கு அப்பால் அதாவது நேபாள எல்லைக்கு அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்றது என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ஆதித்யநாத்
இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி கூறுகையில் மிகவும் வெட்கக்கேடான சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் சமாஜ்வாதி ஆட்சிக்கும் தற்போதைய பாஜக ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என கேள்வி எழுப்பிய மாயாவதி, யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications