16 முறை துப்பாக்கிச்சூடு.. CRPF முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை கொன்ற மர்மநபர்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கடந்த 2008 ம் ஆண்டில் ராம்புராவில் உள்ள சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கியிருந்த முகாமில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 7 வீரர்கள் பலியான நிலையில் இந்த வழக்கில் தண்டனை பெற்ற பயங்கரவாதி முகமது ஷெரீப்-பை இன்று மர்மநபர் ஒருவர் 16 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

கடந்த 2007 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி புத்தாண்டு தினம் பிறப்பதையொட்டி இரவில் ராம்பூராவில் உள்ள சிஆர்பிஃஎப் வீரர்கள் தங்கியிருந்த இடத்தில் திடீரென்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 சிஆர்பிஎஃப் வீரர்கள், ஒரு ரிக்ஷா இழுப்பவர் என்று மொத்தம் 8 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலில் முகமது ஷெரீப்பிற்கு தொடர்பு இருந்தது. இந்நிலையில் தான் அவர் இன்று சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2025 மே மாதம் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அபு சைப்புல்லா காலித் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். இவர் கடந்த 2006ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தின் மீதான தாக்குதல் உள்பட பபிற தாக்குதலில் தொடர்பு கொண்டவர். குறிப்பாக உத்தர பிரதேசத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் முகாம் மீதான தாக்குதலிலும் தொடர்பு கொண்டிருந்தார். அவரை மர்மநபர் ஒருவர் சுட்டு கொன்ற நிலையில் தற்போது முகமது ஷெரீப் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
